• Nov 14 2024

கனேடியத் தமிழர் பேரவையின் தெருவிழாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு..!

Sharmi / Aug 24th 2024, 4:08 pm
image

கனேடியத் தமிழர் பேரவை(CTC) ஏற்பாடு செய்துள்ள தெருவிழாவைப் புறக்கணிக்குமாறு 'கனேடியத் தமிழர் கூட்டு'உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் இன்று மற்றும் நாளையதினம் (24,25) கனடாவின் மார்க்கம் வீதியில் தெரு விழா இடம்பெறவுள்ளதாக  சில வாரங்களுக்கு முன்னர் அவ் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த நிகழ்வுக்கு கனடா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தமிழ் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களால் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தெருவிழாவை ஏற்பாடு செய்துள்ள கனேடியத் தமிழர் பேரவையானது, இலங்கையில் தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசுடன் இணைந்து,  இறுதிப்போரில் இடம்பெற்ற இனஅழிப்பு தொடர்பிலான சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் நீதியினை நீர்த்துப்போக  உதவியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்  முன்வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து 'கனேடியத் தமிழர் கூட்டு' அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்,

'கனேடியத் தமிழர் பேரவையின் அண்மைய நடவடிக்கைகள், கனேடியத் தமிழ்ச் சமூகத்தின் நலன்களையும், கவலைகளையும் போதுமான அளவில் பிரதிநிதித்துவப்படுத் தவறிய நிலையில், இந்த முடிவு, எமது கூட்டு அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது.

பொறுப்புக்கூறல், சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்தியில், இந்த நிகழ்வைத் தொடர்ந்து நடத்த முடிவு செய்ததன் மூலம், CTC சமூகத்தின் கவலைகளைப் புறக்கணித்து, தேவையற்ற மோதல்கள், பிளவுகளையும் ஏற்படுத்தும் ஆபத்தைத் தோற்றுவித்துள்ளது.

எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம் ஆகிய உரிமைகளை நாங்கள் அங்கீகரித்து மதிக்கிறோம். தெருவிழாவில் அதிக பதற்றம், பாதுகாப்புக் கரிசனைகள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து கவனத்திற் கொள்ளுமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம். 

இக்கவலைகள் குறித்து, Toronto நகரம், Toronto காவற்துறைத் தரப்புக்களுடன் கூட்டு முற்கூட்டியே எடுத்துரைத்துள்ளது.

எனவே, தெருவிழாவில் பங்கேற்காமல் தவிர்ப்பதன் ஊடாக தெளிவானதும், ஒற்றுமையானதுமான ஒரு செய்தியை வெளிப்படுத்துவதே எமது நோக்கமாகும். 

பதட்டநிலையை அதிகரிக்கக்கூடிய செயல்களைத் தவிர்ப்பதன் ஊடாக பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைவரையும் வலியுறுத்துகிறோம்.

உரையாடல், அமைதி, பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் எமது சமூகத்தின் உரிமைகள், நலன்களுக்காக வாதிடுவதில் 'கனேடியத் தமிழர் கூட்டு' உறுதியாக உள்ளது. 

உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதுடன், எங்கள் சமூக அமைப்புகளிடம் இருந்து பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மையை பெறுவதற்கான எங்கள் முயற்சிகளில் அனைவரையும் ஒற்றுமையாக செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நிகழ்வை புறக்கணிக்குமாறு பல்வேறு தமிழ் அமைப்புக்களால் சமூகவலைத்தளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனேடியத் தமிழர் பேரவையின் தெருவிழாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு. கனேடியத் தமிழர் பேரவை(CTC) ஏற்பாடு செய்துள்ள தெருவிழாவைப் புறக்கணிக்குமாறு 'கனேடியத் தமிழர் கூட்டு'உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் இன்று மற்றும் நாளையதினம் (24,25) கனடாவின் மார்க்கம் வீதியில் தெரு விழா இடம்பெறவுள்ளதாக  சில வாரங்களுக்கு முன்னர் அவ் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், குறித்த நிகழ்வுக்கு கனடா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தமிழ் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களால் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக தெருவிழாவை ஏற்பாடு செய்துள்ள கனேடியத் தமிழர் பேரவையானது, இலங்கையில் தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசுடன் இணைந்து,  இறுதிப்போரில் இடம்பெற்ற இனஅழிப்பு தொடர்பிலான சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் நீதியினை நீர்த்துப்போக  உதவியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்  முன்வைக்கப்பட்டுள்ளன.இது குறித்து 'கனேடியத் தமிழர் கூட்டு' அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்,'கனேடியத் தமிழர் பேரவையின் அண்மைய நடவடிக்கைகள், கனேடியத் தமிழ்ச் சமூகத்தின் நலன்களையும், கவலைகளையும் போதுமான அளவில் பிரதிநிதித்துவப்படுத் தவறிய நிலையில், இந்த முடிவு, எமது கூட்டு அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது.பொறுப்புக்கூறல், சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்தியில், இந்த நிகழ்வைத் தொடர்ந்து நடத்த முடிவு செய்ததன் மூலம், CTC சமூகத்தின் கவலைகளைப் புறக்கணித்து, தேவையற்ற மோதல்கள், பிளவுகளையும் ஏற்படுத்தும் ஆபத்தைத் தோற்றுவித்துள்ளது.எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம் ஆகிய உரிமைகளை நாங்கள் அங்கீகரித்து மதிக்கிறோம். தெருவிழாவில் அதிக பதற்றம், பாதுகாப்புக் கரிசனைகள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து கவனத்திற் கொள்ளுமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம். இக்கவலைகள் குறித்து, Toronto நகரம், Toronto காவற்துறைத் தரப்புக்களுடன் கூட்டு முற்கூட்டியே எடுத்துரைத்துள்ளது.எனவே, தெருவிழாவில் பங்கேற்காமல் தவிர்ப்பதன் ஊடாக தெளிவானதும், ஒற்றுமையானதுமான ஒரு செய்தியை வெளிப்படுத்துவதே எமது நோக்கமாகும். பதட்டநிலையை அதிகரிக்கக்கூடிய செயல்களைத் தவிர்ப்பதன் ஊடாக பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைவரையும் வலியுறுத்துகிறோம்.உரையாடல், அமைதி, பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் எமது சமூகத்தின் உரிமைகள், நலன்களுக்காக வாதிடுவதில் 'கனேடியத் தமிழர் கூட்டு' உறுதியாக உள்ளது. உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதுடன், எங்கள் சமூக அமைப்புகளிடம் இருந்து பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மையை பெறுவதற்கான எங்கள் முயற்சிகளில் அனைவரையும் ஒற்றுமையாக செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை குறித்த நிகழ்வை புறக்கணிக்குமாறு பல்வேறு தமிழ் அமைப்புக்களால் சமூகவலைத்தளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement