• Sep 17 2024

பலத்த காற்று!! பதுளை பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!!

crownson / Dec 8th 2022, 1:24 pm
image

Advertisement

பதுளை மாவட்டத்தின் பசறை ,லுணுக்கலை ,மடுல்சீமை, நமுனுகுல உட்பட பல பகுதிகளில் நேற்று பிற்பகல் வேலை தொடக்கம் வீசி வரும் கடும் காற்றின் காரணமாக மக்கள் குடியிருப்புகள் மற்றும் பாடசாலைகள், பொது கட்டிடங்கள் என பலவற்றிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

காற்றின் காரணமாக பாரிய மரங்கள் வீதியிலும், வீடுகளிலும் விழுந்துள்ளன.

காற்று தொடர்ந்து வீசுவதால் சேதம் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

லுணுக்கலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹொப்டன் உட்பட்ட பல பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள், பாடசாலைகள் என்பன பகுதி அளவிலும் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளன.

இப்பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக நேரடி கள ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் இ.எம்.எல் உதயகுமார் தெரிவிக்கின்றார்.

இதேவேளை பசறை கல்வி வலையத்தின் அனர்த்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பாடசாலைகளுக்கு இன்று முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்கி பாடசாலை மாணவர்களை பாதுகாப்பான முறையில் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த காலநிலை தொடருமானால் நாளைய தினமும் விடுமுறை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

பலத்த காற்று பதுளை பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை பதுளை மாவட்டத்தின் பசறை ,லுணுக்கலை ,மடுல்சீமை, நமுனுகுல உட்பட பல பகுதிகளில் நேற்று பிற்பகல் வேலை தொடக்கம் வீசி வரும் கடும் காற்றின் காரணமாக மக்கள் குடியிருப்புகள் மற்றும் பாடசாலைகள், பொது கட்டிடங்கள் என பலவற்றிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காற்றின் காரணமாக பாரிய மரங்கள் வீதியிலும், வீடுகளிலும் விழுந்துள்ளன. காற்று தொடர்ந்து வீசுவதால் சேதம் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. லுணுக்கலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹொப்டன் உட்பட்ட பல பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள், பாடசாலைகள் என்பன பகுதி அளவிலும் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளன. இப்பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக நேரடி கள ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் இ.எம்.எல் உதயகுமார் தெரிவிக்கின்றார். இதேவேளை பசறை கல்வி வலையத்தின் அனர்த்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பாடசாலைகளுக்கு இன்று முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்கி பாடசாலை மாணவர்களை பாதுகாப்பான முறையில் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த காலநிலை தொடருமானால் நாளைய தினமும் விடுமுறை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement