• Mar 13 2026

நாட்டில் இன்று பலத்த காற்று வீசக்கூடும்! கொந்தளிக்கும் கடல்

Chithra / Dec 22nd 2025, 11:18 am
image


ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். 


மத்திய மலைப் பிரதேசங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடமேல் மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.


மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

 

மட்டக்களப்பு தொடக்கம்  ஹம்பாந்தோட்டை  ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40km  வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.


வலப்பிட்டிய தொடக்கம் கொழும்பு, புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.


நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் இன்று பலத்த காற்று வீசக்கூடும் கொந்தளிக்கும் கடல் ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். மத்திய மலைப் பிரதேசங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடமேல் மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். மட்டக்களப்பு தொடக்கம்  ஹம்பாந்தோட்டை  ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40km  வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.வலப்பிட்டிய தொடக்கம் கொழும்பு, புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement