• Apr 28 2024

பாடசாலை நிகழ்ச்சிகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்காத நிலை..! கல்வி நிலையங்களே காரணம்..! யாழ். வலயக்கல்வி பணிப்பாளர் samugammedia

Chithra / Jun 9th 2023, 12:49 pm
image

Advertisement

பாடசாலைக் கல்வி என்பது பாரிய செயற்திட்டமாக காணப்படுகின்றது.  பாடசாலையில் முக்கியமான நிகழ்ச்சியின் போது மாணவர்கள் சமூகமளிக்காத நிலை காணப்படுகின்றது என யாழ்ப்பாண வலயக்கல்வி பணிப்பாளர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்று வரும் கலந்துரையாடலில் இவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

நிகழ்வுகள் நடைபெறும் சம காலத்தில் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் நடைபெறும் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காத நிலை காணப்படுகின்றது.

மேலதிக வகுப்புக்களுக்கு நிகராக  எமது பணிப்பின் கீழ்  பாடசாலைகளில் முக்கிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புக்கள் நடைபெறுகின்றன.  

தற்போது பிள்ளைகளிடம் வாசிப்பு பழக்கமின்மை நிலை காணப்படுகின்றது. இவற்றின் விளைவாக பரீட்சை வினாத்தாள்களில் வினாக்களை வாசிக்காது ஒப்புவித்த விடயத்தை விடையளிக்கின்றனர்.

தற்போது போதைப்பொருட் பிரச்சினை செய்திகளில் வெளிவந்தவண்ணமுள்ளன. பாடசாலை நிறைவுற்ற பின் ஏற்படும் பிரச்சினைகளுக்கு பெற்றோரே பெரும்பங்கு பொறுப்பாளராகின்றனர்.

கல்வி நிலையங்குக்கு அனுப்புதலானது  பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்புதற்கு ஒப்பானது என எண்ணும் சமூகமும் காணப்படுகின்றது.

தற்போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமிடையிலான  இணைப்பு மிக விலகிய நிலையிலுள்ளது. மீண்டும் அதனை கட்டியமைக்க வேண்டும். இது போன்ற உரையாடலானது இவ்வாறான நடவடிக்கைகளுக்கான முயற்சியாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

பாடசாலை நிகழ்ச்சிகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்காத நிலை. கல்வி நிலையங்களே காரணம். யாழ். வலயக்கல்வி பணிப்பாளர் samugammedia பாடசாலைக் கல்வி என்பது பாரிய செயற்திட்டமாக காணப்படுகின்றது.  பாடசாலையில் முக்கியமான நிகழ்ச்சியின் போது மாணவர்கள் சமூகமளிக்காத நிலை காணப்படுகின்றது என யாழ்ப்பாண வலயக்கல்வி பணிப்பாளர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்று வரும் கலந்துரையாடலில் இவர் இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், நிகழ்வுகள் நடைபெறும் சம காலத்தில் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் நடைபெறும் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காத நிலை காணப்படுகின்றது.மேலதிக வகுப்புக்களுக்கு நிகராக  எமது பணிப்பின் கீழ்  பாடசாலைகளில் முக்கிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புக்கள் நடைபெறுகின்றன.  தற்போது பிள்ளைகளிடம் வாசிப்பு பழக்கமின்மை நிலை காணப்படுகின்றது. இவற்றின் விளைவாக பரீட்சை வினாத்தாள்களில் வினாக்களை வாசிக்காது ஒப்புவித்த விடயத்தை விடையளிக்கின்றனர்.தற்போது போதைப்பொருட் பிரச்சினை செய்திகளில் வெளிவந்தவண்ணமுள்ளன. பாடசாலை நிறைவுற்ற பின் ஏற்படும் பிரச்சினைகளுக்கு பெற்றோரே பெரும்பங்கு பொறுப்பாளராகின்றனர்.கல்வி நிலையங்குக்கு அனுப்புதலானது  பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்புதற்கு ஒப்பானது என எண்ணும் சமூகமும் காணப்படுகின்றது.தற்போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமிடையிலான  இணைப்பு மிக விலகிய நிலையிலுள்ளது. மீண்டும் அதனை கட்டியமைக்க வேண்டும். இது போன்ற உரையாடலானது இவ்வாறான நடவடிக்கைகளுக்கான முயற்சியாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement