வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள், ஓபின் இன்டர்நசினல் சிலம்பம் போட்டியில் இந்திய அணியுடன் பங்குபற்றி வெற்றி பெற்றமைக்காக வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் நிர்வாகத்தால் இன்று(15) கெளரவிக்கப்பட்டனர்
இயக்குனர் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா தலைமையில் இன்று காலை மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.
7.02.2025 மற்றும் 8.02.2025 ம் திகதிகளில் நுவரெலியா municipal council indoor stadium இல் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான சிலம்பம் போட்டிகளில் பங்குபெற்றி வடமராட்சி கிழக்கில் முதன்முறையாக வெற்றி பெற்றமைக்காக பங்குபற்றிய மாணவர்களும் அதனை பயிற்றுவித்த ஆசிரியரான யாழ் மாவட்ட கராத்தே சங்க தலைவரும்,கல்வி நிலையத்தின் கராத்தே, சிலம்ப பயிற்றுவிப்பாளருமான க.கமலேந்திரன் போன்றோர் கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்கள் தங்களுடைய சிலம்பாட்ட கலையை அரங்கில் வெளிப்படுத்தி பலரது பாராட்டுக்களை பெற்றதுடன் சர்வதேச போட்டிகளில் பங்குபெறுவதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்
இந்நிகழ்வில் கல்வி நிலைய இயக்குனர் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா,யாழ் மருதம் கலை பண்பாட்டு பேரவை இயக்குனர்,கவிஞர் -யாழ் மருதன்,பதில் நிர்வாக இயக்குனர் ராஜீதரன் -சுனீதா ஆசிரியர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சர்வதேச ரீதியில் சிலம்பம் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு கெளரவிப்பு வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள், ஓபின் இன்டர்நசினல் சிலம்பம் போட்டியில் இந்திய அணியுடன் பங்குபற்றி வெற்றி பெற்றமைக்காக வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் நிர்வாகத்தால் இன்று(15) கெளரவிக்கப்பட்டனர்இயக்குனர் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா தலைமையில் இன்று காலை மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.7.02.2025 மற்றும் 8.02.2025 ம் திகதிகளில் நுவரெலியா municipal council indoor stadium இல் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான சிலம்பம் போட்டிகளில் பங்குபெற்றி வடமராட்சி கிழக்கில் முதன்முறையாக வெற்றி பெற்றமைக்காக பங்குபற்றிய மாணவர்களும் அதனை பயிற்றுவித்த ஆசிரியரான யாழ் மாவட்ட கராத்தே சங்க தலைவரும்,கல்வி நிலையத்தின் கராத்தே, சிலம்ப பயிற்றுவிப்பாளருமான க.கமலேந்திரன் போன்றோர் கெளரவிக்கப்பட்டனர்.நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்கள் தங்களுடைய சிலம்பாட்ட கலையை அரங்கில் வெளிப்படுத்தி பலரது பாராட்டுக்களை பெற்றதுடன் சர்வதேச போட்டிகளில் பங்குபெறுவதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்இந்நிகழ்வில் கல்வி நிலைய இயக்குனர் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா,யாழ் மருதம் கலை பண்பாட்டு பேரவை இயக்குனர்,கவிஞர் -யாழ் மருதன்,பதில் நிர்வாக இயக்குனர் ராஜீதரன் -சுனீதா ஆசிரியர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.