• Apr 24 2024

சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் samugammedia

Chithra / Jun 5th 2023, 6:09 pm
image

Advertisement

சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களால் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன், மரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரியில் இன்று (05.06) மதியம் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரநடுகை இடம்பெற்றதுடன், அதனைத் தொடாந்து சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது.

தேசிய கல்வியற் கல்லூரியில் இருந்து பூந்தோட்டம் சந்தி வரை ஊர்வலமாக சென்ற ஆசிரிய மாணவர்கள் சூழல் பாதுகாப்பு தொடர்பான படங்களையும், சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்ததுடன், பூந்தோட்டம் சந்தியை அடைந்ததும், பொதுக்களுக்கு மரநடுகைக்கான மரங்களை விநியோகித்ததுடன், மீண்டும் ஊர்வலமாக தேசிய கல்வியற் கல்லூரியை வந்தனர்.

கல்லூரி வாயிலில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான குறியீட்டு நடாகம் ஒன்று ஆசிரிய மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது. குறித்த நிகழ்வில் தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள், பொது மக்கள் என்பலரும் கலந்து கொண்டனர். 


சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் samugammedia சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களால் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன், மரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரியில் இன்று (05.06) மதியம் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரநடுகை இடம்பெற்றதுடன், அதனைத் தொடாந்து சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது.தேசிய கல்வியற் கல்லூரியில் இருந்து பூந்தோட்டம் சந்தி வரை ஊர்வலமாக சென்ற ஆசிரிய மாணவர்கள் சூழல் பாதுகாப்பு தொடர்பான படங்களையும், சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்ததுடன், பூந்தோட்டம் சந்தியை அடைந்ததும், பொதுக்களுக்கு மரநடுகைக்கான மரங்களை விநியோகித்ததுடன், மீண்டும் ஊர்வலமாக தேசிய கல்வியற் கல்லூரியை வந்தனர்.கல்லூரி வாயிலில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான குறியீட்டு நடாகம் ஒன்று ஆசிரிய மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது. குறித்த நிகழ்வில் தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள், பொது மக்கள் என்பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement