• Nov 23 2024

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தரமற்ற மருந்துகள்: ஆய்வில் வெளியான தகவல்!

Tamil nila / Jun 26th 2024, 7:10 pm
image

இந்தியாவில் தயாரிக்கப்படும் 52 மருந்து வகைகள் தரமற்றவை என மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக அதில் 50 மருந்துகள், காய்ச்சல் மருந்து,வயிற்றுப் பிரச்சினைக்கான மருந்து மற்றும் ஆன்டிபயோடிக் மருந்துகள் போன்றவையும் உள்ளடங்குகின்றன.

விட்டமின், கல்சியம், சத்து மாத்திரைகள், ஹைப்பர் டென்ஷனுக்கான மருந்துகள், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைக்களுக்கான மருந்துகள் போன்றவையும் உள்ளன.

இந்த 52 தரமற்ற மருந்துகளில் 22 மருந்துகள் இமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகின்றன.

 ஜெய்ப்பூர், குஜராத், இந்தோர், அந்திரப்பிரதேசம், ஹைதராபாத் உள்ளிட்ட பிரதேசங்களில் மீதமுள்ள மருந்துகள் தயாரிக்கப்பட்டு மருத்துவமனைகள், மருந்தகங்களில் விநியோகம் செய்யப்படுகின்றன.

குறித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

ஏற்கனவே சந்தையிலுள்ள தரமற்ற 52 மருந்துகளை திரும்பப் பெறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் இமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட 120 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தரமற்ற மருந்துகள்: ஆய்வில் வெளியான தகவல் இந்தியாவில் தயாரிக்கப்படும் 52 மருந்து வகைகள் தரமற்றவை என மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.குறிப்பாக அதில் 50 மருந்துகள், காய்ச்சல் மருந்து,வயிற்றுப் பிரச்சினைக்கான மருந்து மற்றும் ஆன்டிபயோடிக் மருந்துகள் போன்றவையும் உள்ளடங்குகின்றன.விட்டமின், கல்சியம், சத்து மாத்திரைகள், ஹைப்பர் டென்ஷனுக்கான மருந்துகள், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைக்களுக்கான மருந்துகள் போன்றவையும் உள்ளன.இந்த 52 தரமற்ற மருந்துகளில் 22 மருந்துகள் இமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகின்றன. ஜெய்ப்பூர், குஜராத், இந்தோர், அந்திரப்பிரதேசம், ஹைதராபாத் உள்ளிட்ட பிரதேசங்களில் மீதமுள்ள மருந்துகள் தயாரிக்கப்பட்டு மருத்துவமனைகள், மருந்தகங்களில் விநியோகம் செய்யப்படுகின்றன.குறித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளது.ஏற்கனவே சந்தையிலுள்ள தரமற்ற 52 மருந்துகளை திரும்பப் பெறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டில் இமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட 120 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement