• Nov 26 2024

வானிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்- அதிகரிக்கும் மழை..!!

Tamil nila / May 11th 2024, 7:09 am
image

நாட்டின் சில பகுதிகளில் இன்று (11) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

 வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதன்படி மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

 அத்துடன் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


வானிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்- அதிகரிக்கும் மழை. நாட்டின் சில பகுதிகளில் இன்று (11) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அத்துடன் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement