• Sep 17 2024

இந்தியாவில் ஆண்களின் உள்ளாடை விற்பனையில் திடீர் சரிவு!..SamugamMedia

Sharmi / Feb 28th 2023, 10:50 am
image

Advertisement

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறுபட்ட காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

சின்னச் சின்ன விஷயங்கள் கூடப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அனைத்து பொருட்களின் விற்பனையும் மக்களின் வருமானத்தின் அடிப்படையில் உள்ளது. இந்த வர்த்தகத்தின் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் அமையும்.

அந்த வகையில் அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் ஆண்களின் உள்ளாடை அதிலும் குறிப்பாக ஜட்டி விற்பனை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோல் எனக் கூறுகிறார்.


அந்தவகையில் குறிப்பாக இந்தியாவில் ஆண்கள் பிரிவு உள்ளாடைகள் நிறுவனங்கள் நிஃப்டி சந்தையில் மிகவும் மோசமாகச் செயல்படுகிறது.

இதனால் இதை இந்திய பொருளாதாரம் குறித்த அச்சமாகவும் பார்க்கப்படுகிறது.


நிஃப்டி 50-யில் கடந்த ஒரு வருடத்தில் உள்ளாடை நிறுவனங்கள் மோசமாகச் செயல்பட்டு வருகிறது. ரூபா அண்ட் கோ 51 சதவீதம் சரிவு, லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 50 சதவீதம் சரிவு, பேஜ் இண்டஸ்ட்ரீஸ் 7 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இது தத்தம் நிறுவனங்களின் உள்ளாடை விற்பனையிலும் எதிர்ரொலிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் பொருளாதாரத்தில் ஏதோ சரியாக இல்லை என்பதற்கான சிக்னலாகப் பார்க்கப்படுகிறது.


ஆண்களின் உள்ளாடை விற்பனை குறைகிறது என்றால் பொருளாதாரம் ரெசிஷன் அல்லது சரிவை நோக்கி செல்கிறது என்று பொருள். இந்த நிலையில் இந்தியாவில் உள்ளாடை விற்பனை அல்லது பயன்பாடு 55 சதவீதமாகச் சரிந்துள்ளது, இது பெரும் தலைவலியாக மாறியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







இந்தியாவில் ஆண்களின் உள்ளாடை விற்பனையில் திடீர் சரிவு.SamugamMedia ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறுபட்ட காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.சின்னச் சின்ன விஷயங்கள் கூடப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அனைத்து பொருட்களின் விற்பனையும் மக்களின் வருமானத்தின் அடிப்படையில் உள்ளது. இந்த வர்த்தகத்தின் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் அமையும். அந்த வகையில் அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் ஆண்களின் உள்ளாடை அதிலும் குறிப்பாக ஜட்டி விற்பனை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோல் எனக் கூறுகிறார்.அந்தவகையில் குறிப்பாக இந்தியாவில் ஆண்கள் பிரிவு உள்ளாடைகள் நிறுவனங்கள் நிஃப்டி சந்தையில் மிகவும் மோசமாகச் செயல்படுகிறது. இதனால் இதை இந்திய பொருளாதாரம் குறித்த அச்சமாகவும் பார்க்கப்படுகிறது.நிஃப்டி 50-யில் கடந்த ஒரு வருடத்தில் உள்ளாடை நிறுவனங்கள் மோசமாகச் செயல்பட்டு வருகிறது. ரூபா அண்ட் கோ 51 சதவீதம் சரிவு, லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 50 சதவீதம் சரிவு, பேஜ் இண்டஸ்ட்ரீஸ் 7 சதவீதம் சரிவடைந்துள்ளது. இது தத்தம் நிறுவனங்களின் உள்ளாடை விற்பனையிலும் எதிர்ரொலிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் பொருளாதாரத்தில் ஏதோ சரியாக இல்லை என்பதற்கான சிக்னலாகப் பார்க்கப்படுகிறது.ஆண்களின் உள்ளாடை விற்பனை குறைகிறது என்றால் பொருளாதாரம் ரெசிஷன் அல்லது சரிவை நோக்கி செல்கிறது என்று பொருள். இந்த நிலையில் இந்தியாவில் உள்ளாடை விற்பனை அல்லது பயன்பாடு 55 சதவீதமாகச் சரிந்துள்ளது, இது பெரும் தலைவலியாக மாறியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement