• May 03 2024

நாசாவில் திடீர் மின்தடை..! விண்வெளி நிலையத்திற்கு ஆபத்தா..! வெளியான அதிர்ச்சித் தகவல்..!

Sharmi / Jul 27th 2023, 9:25 am
image

Advertisement

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்றுமுன்தினம் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு 90 நிமிடங்கள் வரை துண்டிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பக்அப் கன்ட்ரோல் சிஸ்டம் மூலமாக விண்வெளி மையத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மின்தடையால் வீரர்களுடனான தொடர்பு சுமார் 90 நிமிடங்களுக்கு துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனையடுத்து ரஷ்யாவின் தகவல் தொடர்பு அமைப்பின் மூலமாக 20 நிமிடத்தில் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.




விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளி மையத்துடன் தொடர்பு கொள்ள நாசாவில் தனியாக கட்டுப்பாட்டு மையம் உள்ளது.

ஒருவேளை இந்த மையம் வேலை செய்யவில்லை என்றால், இதற்கு மாற்று திட்டம் வகுத்துள்ளது. முதன்முறையாக விண்வெளி மையத்தை தொடர்பு கொள்ள நாசா இந்த மாற்று ஏற்பாட்டை
பயன்படுத்தியுள்ளது.

இது குறித்து விண்வெளி நிலைய திட்ட மேலாளர் ஜோல் கூறுகையில்,

'விண்வெளி வீரர்களுக்கோ, நிலையத்திற்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.



நாசாவில் திடீர் மின்தடை. விண்வெளி நிலையத்திற்கு ஆபத்தா. வெளியான அதிர்ச்சித் தகவல். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்றுமுன்தினம் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு 90 நிமிடங்கள் வரை துண்டிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து பக்அப் கன்ட்ரோல் சிஸ்டம் மூலமாக விண்வெளி மையத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த மின்தடையால் வீரர்களுடனான தொடர்பு சுமார் 90 நிமிடங்களுக்கு துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனையடுத்து ரஷ்யாவின் தகவல் தொடர்பு அமைப்பின் மூலமாக 20 நிமிடத்தில் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளி மையத்துடன் தொடர்பு கொள்ள நாசாவில் தனியாக கட்டுப்பாட்டு மையம் உள்ளது. ஒருவேளை இந்த மையம் வேலை செய்யவில்லை என்றால், இதற்கு மாற்று திட்டம் வகுத்துள்ளது. முதன்முறையாக விண்வெளி மையத்தை தொடர்பு கொள்ள நாசா இந்த மாற்று ஏற்பாட்டைபயன்படுத்தியுள்ளது.இது குறித்து விண்வெளி நிலைய திட்ட மேலாளர் ஜோல் கூறுகையில்,'விண்வெளி வீரர்களுக்கோ, நிலையத்திற்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement