• May 04 2024

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட சுமந்திரன் எம்.பி...!

Sharmi / Apr 5th 2024, 4:47 pm
image

Advertisement

இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் இன்றையதினம் திருகோணமலை திருக்கோணேஸ்வரர்  ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் அங்கு விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்றைய தினம்(05)  அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன், குறித்த வழக்கு முடிவடைந்ததையடுத்து,  எம்.ஏ சுமந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடனடியாக விரைந்து சென்று திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாட்டில் ஈடுபட்டனர். 

இதேநேரம், குறித்த ஆலயத்தில் கனடா நலன்புரிச் சங்கத்தின் ஊடாக அன்னதானம் வழங்கப்பட்டதுடன், அன்னதான நிகழ்வினை இலங்கை தமிழரசு  கட்சியின் மாவட்ட கிளைத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத்தின் தலைவருமான எஸ்.குகதாசன் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட சுமந்திரன் எம்.பி. இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் இன்றையதினம் திருகோணமலை திருக்கோணேஸ்வரர்  ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் அங்கு விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்றைய தினம்(05)  அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.குறித்த வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன், குறித்த வழக்கு முடிவடைந்ததையடுத்து,  எம்.ஏ சுமந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடனடியாக விரைந்து சென்று திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாட்டில் ஈடுபட்டனர். இதேநேரம், குறித்த ஆலயத்தில் கனடா நலன்புரிச் சங்கத்தின் ஊடாக அன்னதானம் வழங்கப்பட்டதுடன், அன்னதான நிகழ்வினை இலங்கை தமிழரசு  கட்சியின் மாவட்ட கிளைத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத்தின் தலைவருமான எஸ்.குகதாசன் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement