• Nov 25 2024

தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு? ஆரம்பகட்ட இணக்கப்பாட்டை மேற்கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி

Chithra / Aug 3rd 2024, 10:49 am
image

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான ஆரம்பக்கட்ட இணக்கப்பாட்டை தமிழ் முற்போக்குக் கூட்டணி மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் உயர்பீட கூட்டம் இடம்பெற்றபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மலையக மக்கள் சார்ந்த பல்வேறு அம்சங்கள் அடங்கிய யோசனைத்திட்டம் ஒன்றையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சமர்ப்பித்து பேச்சுவார்த்தை நடத்தவும் இதன்போது தீர்மானித்துள்ளது.

அத்துடன் குறித்த யோசனைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆழமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த யோசனைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை, சஜித் பிரேமதாச தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணி கோரவுள்ளது.

குறித்த விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டால், எதிர்வரும் எட்டாம் திகதி ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவும்  தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு ஆரம்பகட்ட இணக்கப்பாட்டை மேற்கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான ஆரம்பக்கட்ட இணக்கப்பாட்டை தமிழ் முற்போக்குக் கூட்டணி மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் உயர்பீட கூட்டம் இடம்பெற்றபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் மலையக மக்கள் சார்ந்த பல்வேறு அம்சங்கள் அடங்கிய யோசனைத்திட்டம் ஒன்றையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சமர்ப்பித்து பேச்சுவார்த்தை நடத்தவும் இதன்போது தீர்மானித்துள்ளது.அத்துடன் குறித்த யோசனைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆழமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இந்த யோசனைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை, சஜித் பிரேமதாச தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணி கோரவுள்ளது.குறித்த விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டால், எதிர்வரும் எட்டாம் திகதி ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவும்  தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

Advertisement

Advertisement

Advertisement