• Nov 26 2024

நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு ஆதரவு! வியாழேந்திரன் அறிவிப்பு

Chithra / Oct 18th 2024, 11:03 am
image

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை தாம் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் களம் காணயிருந்தோம். துரதிர்ஸ்டவசமாக எங்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இலங்கையில் 70க்கும் அதிகமான கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்றாக நாங்கள் போட்டியிடவிருந்த ஜனநாயக தேசிய கூட்டணியினுடைய வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் நாங்கள் வெற்றிபெறுவதற்கான வாயப்புகள் இருந்தன.

காரணம் எங்களது பலமான கட்டமைப்பு. அந்த கட்டமைப்பில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணிக்கின்ற கழக உடன்பிறப்புகள் உள்ளனர். சிறு விடயம் கவனத்தில்கொள்ளாததால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு நமது ஆதரவை வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். நாங்கள் ஒரு தனிப்பட்ட நபருக்கு எங்களது ஆதரவினை வழங்கவில்லை.

சங்கு சின்னத்தில் அவர்கள் களமிறங்கியுள்ளார்கள். அவர்களுக்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம். 

தமிழ் பிரதிநிதித்துவத்தினை பாதுகாப்பதற்காக தயவுசெய்து முழுமையான ஆதரவினை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு ஆதரவு வியாழேந்திரன் அறிவிப்பு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை தாம் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,“இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் களம் காணயிருந்தோம். துரதிர்ஸ்டவசமாக எங்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இலங்கையில் 70க்கும் அதிகமான கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.அதில் ஒன்றாக நாங்கள் போட்டியிடவிருந்த ஜனநாயக தேசிய கூட்டணியினுடைய வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் நாங்கள் வெற்றிபெறுவதற்கான வாயப்புகள் இருந்தன.காரணம் எங்களது பலமான கட்டமைப்பு. அந்த கட்டமைப்பில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணிக்கின்ற கழக உடன்பிறப்புகள் உள்ளனர். சிறு விடயம் கவனத்தில்கொள்ளாததால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.எனவே, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு நமது ஆதரவை வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். நாங்கள் ஒரு தனிப்பட்ட நபருக்கு எங்களது ஆதரவினை வழங்கவில்லை.சங்கு சின்னத்தில் அவர்கள் களமிறங்கியுள்ளார்கள். அவர்களுக்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம். தமிழ் பிரதிநிதித்துவத்தினை பாதுகாப்பதற்காக தயவுசெய்து முழுமையான ஆதரவினை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement