• May 03 2024

சுரேஷ் சலே ராஜபக்ஷர்களின் பாதுகாவலன்: சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி குறித்து சர்வதேச விசாரணை அவசியம் - சரத் பொன்சேகா

Chithra / Sep 8th 2023, 9:28 am
image

Advertisement

 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பது பயனற்றது. சர்வதேச விசாரணை அத்தியாவசியமானது. புலனாய்வு பிரிவின்  பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷர்களின் குடும்ப பாதுகாவலன் என  பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சனல் 4 குறிப்பிட்ட விடயங்களை பாராளுமன்ற தெரிவுகுழு ஊடாக விசாரணை செய்வது பயனற்றது. 

ஆகவே சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சனல் 4 காணொளியில் சுரேஷ் சலே தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது புலனாய்வு பிரிவில் இருந்துக் கொண்டு சலே, பொனிபஸ் பெரேரா என்பவருடன் ஒன்றிணைந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுரேஷ் சலே புலனாய்வு பிரிவில் அதிகாரம் படைத்தவராக்கப்பட்டார்.

புலனாய்வு பிரிவின்  பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷர்களின் பாதுகாவலன் அத்துடன் ராஜபக்ஷர்களின் வீட்டில் மலசலகூடம் தூய்மைப்படுத்துபவர். 

ஆகவே சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

சுரேஷ் சலே ராஜபக்ஷர்களின் பாதுகாவலன்: சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி குறித்து சர்வதேச விசாரணை அவசியம் - சரத் பொன்சேகா  உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பது பயனற்றது. சர்வதேச விசாரணை அத்தியாவசியமானது. புலனாய்வு பிரிவின்  பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷர்களின் குடும்ப பாதுகாவலன் என  பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.சனல் 4 குறிப்பிட்ட விடயங்களை பாராளுமன்ற தெரிவுகுழு ஊடாக விசாரணை செய்வது பயனற்றது. ஆகவே சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.சனல் 4 காணொளியில் சுரேஷ் சலே தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது புலனாய்வு பிரிவில் இருந்துக் கொண்டு சலே, பொனிபஸ் பெரேரா என்பவருடன் ஒன்றிணைந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுரேஷ் சலே புலனாய்வு பிரிவில் அதிகாரம் படைத்தவராக்கப்பட்டார்.புலனாய்வு பிரிவின்  பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷர்களின் பாதுகாவலன் அத்துடன் ராஜபக்ஷர்களின் வீட்டில் மலசலகூடம் தூய்மைப்படுத்துபவர். ஆகவே சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement