• Jan 19 2025

சுவாமி விவேகானந்தரின் 162வது பிறந்ததின நிகழ்வு - வவுனியாவில் அனுஸ்டிப்பு

Chithra / Jan 12th 2025, 11:20 am
image



சுவாமி விவேகானந்தரின் 162ஆவது பிறந்த தின நிகழ்வு வவுனியாவில் இன்று காலை இடம்பெற்றது. 

வவுனியா புகையிரத நிலைய வீதிலுள்ள நினைவுத் தூபியில் இந் நிகழ்வு இடம்பெற்றது. 

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும், வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, இந்நிகழ்வில்

அவரது சிலைக்கு, மலர் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

சுவாமி விவேகானந்தர் தொடர்பான நினைவுரைகளை தமிழ்மணி அகளங்கன் மற்றும் மாணவர்கள் வழங்கியிருந்தனர். 

நிகழ்வில் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவர் ப.சத்தியநாதன் மற்றும் உறுப்பினர்கள், நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், உள்ளூராட்சிமன்ற முன்னாள் உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


சுவாமி விவேகானந்தரின் 162வது பிறந்ததின நிகழ்வு - வவுனியாவில் அனுஸ்டிப்பு சுவாமி விவேகானந்தரின் 162ஆவது பிறந்த தின நிகழ்வு வவுனியாவில் இன்று காலை இடம்பெற்றது. வவுனியா புகையிரத நிலைய வீதிலுள்ள நினைவுத் தூபியில் இந் நிகழ்வு இடம்பெற்றது. சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும், வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, இந்நிகழ்வில்அவரது சிலைக்கு, மலர் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. சுவாமி விவேகானந்தர் தொடர்பான நினைவுரைகளை தமிழ்மணி அகளங்கன் மற்றும் மாணவர்கள் வழங்கியிருந்தனர். நிகழ்வில் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவர் ப.சத்தியநாதன் மற்றும் உறுப்பினர்கள், நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், உள்ளூராட்சிமன்ற முன்னாள் உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement