• Feb 13 2025

நிறுத்தப்பட்டது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான பேச்சுவார்த்தை

Chithra / Feb 13th 2025, 1:36 pm
image


ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட தேர்தலை இலக்காகக் கொண்டு ஒன்றிணைந்து செயற்படுவதற்காகக் குறித்த இரு கட்சிகளுக்கும் இடையே பல சுற்றுக் கலந்துரையாடல்கள் நடைபெற்று வந்தன.

இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக இரு கட்சிகளினதும் சார்பில் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டன.

எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைக்காக நியமிக்கப்படாத தரப்பினரும் கலந்துரையாடல்களில் பங்கேற்று உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளிப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

குறிப்பாகக் கலந்துரையாடல்களுக்காக நியமிக்கப்படாத தரப்பினர், கலந்துரையாடல்களில் பங்கேற்று சின்னம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டார்.


நிறுத்தப்பட்டது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட தேர்தலை இலக்காகக் கொண்டு ஒன்றிணைந்து செயற்படுவதற்காகக் குறித்த இரு கட்சிகளுக்கும் இடையே பல சுற்றுக் கலந்துரையாடல்கள் நடைபெற்று வந்தன.இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக இரு கட்சிகளினதும் சார்பில் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டன.எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைக்காக நியமிக்கப்படாத தரப்பினரும் கலந்துரையாடல்களில் பங்கேற்று உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளிப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.குறிப்பாகக் கலந்துரையாடல்களுக்காக நியமிக்கப்படாத தரப்பினர், கலந்துரையாடல்களில் பங்கேற்று சின்னம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement