• Mar 17 2025

தாலிக்கொடியுடன் பாடசாலைக்கு வந்த 9ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கதி..!

Sharmi / Feb 13th 2025, 4:22 pm
image

கழுத்தில் தாலியுடன் பாடசாலைக்கு வந்த 9ஆம் ஆண்டு மாணவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 9இல் கல்வி பயிலும்  14 வயது மாணவிக்கும் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது நபருக்கும் அண்மையில்  திருமணம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி திருமணம் முடிந்த நிலையில், தாலியை ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு பாடசாலைக்கு வருகை தந்ததை வகுப்பு ஆசிரியர் அவதானித்துள்ளார். 

இதனையடுத்து பாடசாலை ஆசிரியர்கள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியதுடன், கிருஷ்ணகிரியிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் முறைப்பாடு அளித்துள்ளார். 

இதனையடுத்து குறித்த மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,

வீட்டில் விஷேசம் எனக்கூறி மாணவி 3 நாட்கள் திருமணத்திற்கு விடுமுறை பெற்றமை தெரியவந்துள்ளது. 

இந் நிலையில் திருமணம் செய்த 25 வயது நபர் மற்றும் மாணவியின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.




தாலிக்கொடியுடன் பாடசாலைக்கு வந்த 9ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கதி. கழுத்தில் தாலியுடன் பாடசாலைக்கு வந்த 9ஆம் ஆண்டு மாணவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இந்தியாவின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 9இல் கல்வி பயிலும்  14 வயது மாணவிக்கும் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது நபருக்கும் அண்மையில்  திருமணம் இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவி திருமணம் முடிந்த நிலையில், தாலியை ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு பாடசாலைக்கு வருகை தந்ததை வகுப்பு ஆசிரியர் அவதானித்துள்ளார். இதனையடுத்து பாடசாலை ஆசிரியர்கள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியதுடன், கிருஷ்ணகிரியிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து குறித்த மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,வீட்டில் விஷேசம் எனக்கூறி மாணவி 3 நாட்கள் திருமணத்திற்கு விடுமுறை பெற்றமை தெரியவந்துள்ளது. இந் நிலையில் திருமணம் செய்த 25 வயது நபர் மற்றும் மாணவியின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement