• May 17 2024

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் திடீர் உயிரிழப்பு!SamugamMedia

Sharmi / Feb 15th 2023, 9:42 am
image

Advertisement

கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவினை பொறுத்தவரையில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும், பல எதிர்பாராத மரணங்கள் ரசிகர்களை மட்டுமல்லாது திரையுலகை சேர்ந்த பலரையும் உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.



அந்தவகையில் கே.விஸ்வநாதன், வாணி ஜெயராம், கஜேந்திரன் ஆகியோரின் மரணத்தை அடுத்து, தற்போது எம். ஜி.ஆர்.சிவாஜி, ஜெயலலிதா, ஜெய்சங்கர் முத்துராமன், சிவக்குமார்,கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நடிகர், நடிகையர் படங்களில் பணியாற்றிய பிரபல கலை இயக்குநர் சு.ராதா உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாகவும் அதனோடு இணைந்து உடல் நல பிரச்சனைகள் காரணமாகவும் பலவாறு அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.


அந்தவகையில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த காரணத்தினால் சமீபத்தில் இவரது குடும்பத்தினர் அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்திருந்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

88 வயதாகும் பழம் பெரும் கலை இயக்குநரான இவருக்கு லீலாவதி (74 )என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.  இவர் தமிழ் சினிமாவில் பல விருதுகளை பெற்று சாதனை படைத்திருக்கின்றார்.

இவரின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.





தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் திடீர் உயிரிழப்புSamugamMedia கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவினை பொறுத்தவரையில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும், பல எதிர்பாராத மரணங்கள் ரசிகர்களை மட்டுமல்லாது திரையுலகை சேர்ந்த பலரையும் உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.அந்தவகையில் கே.விஸ்வநாதன், வாணி ஜெயராம், கஜேந்திரன் ஆகியோரின் மரணத்தை அடுத்து, தற்போது எம். ஜி.ஆர்.சிவாஜி, ஜெயலலிதா, ஜெய்சங்கர் முத்துராமன், சிவக்குமார்,கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நடிகர், நடிகையர் படங்களில் பணியாற்றிய பிரபல கலை இயக்குநர் சு.ராதா உயிரிழந்துள்ளார்.இவர் கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாகவும் அதனோடு இணைந்து உடல் நல பிரச்சனைகள் காரணமாகவும் பலவாறு அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அந்தவகையில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த காரணத்தினால் சமீபத்தில் இவரது குடும்பத்தினர் அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்திருந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.88 வயதாகும் பழம் பெரும் கலை இயக்குநரான இவருக்கு லீலாவதி (74 )என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.  இவர் தமிழ் சினிமாவில் பல விருதுகளை பெற்று சாதனை படைத்திருக்கின்றார்.இவரின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement