• Apr 28 2024

தமிழ் எம்.பிகளே பதவிகளை தூக்கியெறிந்து அரசாங்கத்திற்கு சவால் விடுங்கள்...!ரவிகுமார் கோரிக்கை..!samugammedia

Sharmi / Oct 2nd 2023, 3:51 pm
image

Advertisement

இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பேசப்படுகின்ற ஒரு விடயம் முல்லைத்தீவு நீதவான் சரவணராஜா அவர்களுடைய பதவி விலகல், அந்த வகையில் சட்டத்தை சரியான முறையில் நேர்மையாக கொண்டு சென்ற நீதிபதி சரவணராஜா அவருக்கு நடைபெற்ற அசம்பாவிதங்கள் மனவருத்தத்தை தருகின்றது என புதிய ஐனநாயக மக்கள் முன்னனியின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான நடராஐா ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டத்தை சரியான முறையில் கொண்டு சென்ற முல்லைத்தீவு நீதவான் சரவணராஜாவை  பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர மற்றும் கம்மன்பில் போன்ற இனவாதிகள் அவரை துரத்தி துரத்தி குறுந்தூர்மலை விவகாரம் தொடர்பில் பல போராட்டங்களையும் எதிர்ப்புக்களையும் இந்து மக்களுடைய அபிலாசைகளையும் தடுத்து சிங்கள பௌத்த பிக்குகள் செயற்படுகின்றனர்

மேலும் பௌத்த பிக்குகள் புத்தபெருமானுடைய இடத்திலிருந்து போதிக்க வேண்டும் என்றும் கூறிய அவர் ஒரு சில பௌத்த பிக்குகள் ரவுடிகளாக செயற்பட்டு இந்து மக்களுடைய வரலாற்றை இல்லாது ஒழிப்பதற்கு செயற்பட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு எதிராக அதற்கு எதிராக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

நீதியமைச்சர் விஜயதாச கூறுகின்றார்,  புலனாய்வாளர்கள் நீதிபதி சரவணராஜாவை துரத்த வில்லை என்று. ஆனால் இரண்டு தூதுவரை கொழும்பில் வந்து சந்தித்தார் என்று கூறுகின்றீர்கள் இவ்வாறான தகவல் எப்படி கிடைத்தது என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் இந்த நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவாக இருந்தாலும் சரி கோட்டபாய ராஜபக்சவாக இருந்தாலும் சரி தற்போதுள்ள ரணிலாக இருந்தாலும் சரி தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கப்பெறாது என்பதே உண்மை.

மேலும், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற கோமாளிக் கூட்டம்  பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து இருக்கின்றார்கள்.  அவர்களுக்கு தான் கூற விரும்பும் விடயமாக உங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளை செயற்படாமல் ஒட்டுமொத்த சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக செயற்பட்டு முதுகெலும்பிருந்தால் உங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்து விட்டு அரசாங்கத்திற்கு சவால் விடுங்கள்  என தெரிவித்துள்ளார்

குறுந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நான் பல ஊடகங்களில் கூறியிருந்தேன். பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமாருடன் இணைந்து செயற்படுவீர்களானால் உங்களுக்கான தீர்வு கிடைக்காது எனவும் வருகின்ற தேர்தலில் மக்கள் பிரதிநிதித்துவத்தை கூட்டுவதற்காகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற கோமாளிகள் செயற்பட்டு கொண்டு இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களே இன மோதல்களையும் உருவாக்குகின்றனர் என்றும் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒற்றுமையாக இருக்கின்ற இந்த வேளையில் இவர்கள் இன மோதல்களை தூண்டப்பார்க்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


தமிழ் எம்.பிகளே பதவிகளை தூக்கியெறிந்து அரசாங்கத்திற்கு சவால் விடுங்கள்.ரவிகுமார் கோரிக்கை.samugammedia இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பேசப்படுகின்ற ஒரு விடயம் முல்லைத்தீவு நீதவான் சரவணராஜா அவர்களுடைய பதவி விலகல், அந்த வகையில் சட்டத்தை சரியான முறையில் நேர்மையாக கொண்டு சென்ற நீதிபதி சரவணராஜா அவருக்கு நடைபெற்ற அசம்பாவிதங்கள் மனவருத்தத்தை தருகின்றது என புதிய ஐனநாயக மக்கள் முன்னனியின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான நடராஐா ரவிகுமார் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டத்தை சரியான முறையில் கொண்டு சென்ற முல்லைத்தீவு நீதவான் சரவணராஜாவை  பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர மற்றும் கம்மன்பில் போன்ற இனவாதிகள் அவரை துரத்தி துரத்தி குறுந்தூர்மலை விவகாரம் தொடர்பில் பல போராட்டங்களையும் எதிர்ப்புக்களையும் இந்து மக்களுடைய அபிலாசைகளையும் தடுத்து சிங்கள பௌத்த பிக்குகள் செயற்படுகின்றனர் மேலும் பௌத்த பிக்குகள் புத்தபெருமானுடைய இடத்திலிருந்து போதிக்க வேண்டும் என்றும் கூறிய அவர் ஒரு சில பௌத்த பிக்குகள் ரவுடிகளாக செயற்பட்டு இந்து மக்களுடைய வரலாற்றை இல்லாது ஒழிப்பதற்கு செயற்பட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு எதிராக அதற்கு எதிராக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம். நீதியமைச்சர் விஜயதாச கூறுகின்றார்,  புலனாய்வாளர்கள் நீதிபதி சரவணராஜாவை துரத்த வில்லை என்று. ஆனால் இரண்டு தூதுவரை கொழும்பில் வந்து சந்தித்தார் என்று கூறுகின்றீர்கள் இவ்வாறான தகவல் எப்படி கிடைத்தது என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இந்த நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவாக இருந்தாலும் சரி கோட்டபாய ராஜபக்சவாக இருந்தாலும் சரி தற்போதுள்ள ரணிலாக இருந்தாலும் சரி தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கப்பெறாது என்பதே உண்மை.மேலும், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற கோமாளிக் கூட்டம்  பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து இருக்கின்றார்கள்.  அவர்களுக்கு தான் கூற விரும்பும் விடயமாக உங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளை செயற்படாமல் ஒட்டுமொத்த சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக செயற்பட்டு முதுகெலும்பிருந்தால் உங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்து விட்டு அரசாங்கத்திற்கு சவால் விடுங்கள்  என தெரிவித்துள்ளார் குறுந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நான் பல ஊடகங்களில் கூறியிருந்தேன். பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமாருடன் இணைந்து செயற்படுவீர்களானால் உங்களுக்கான தீர்வு கிடைக்காது எனவும் வருகின்ற தேர்தலில் மக்கள் பிரதிநிதித்துவத்தை கூட்டுவதற்காகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற கோமாளிகள் செயற்பட்டு கொண்டு இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் இவர்களே இன மோதல்களையும் உருவாக்குகின்றனர் என்றும் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒற்றுமையாக இருக்கின்ற இந்த வேளையில் இவர்கள் இன மோதல்களை தூண்டப்பார்க்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement