• Nov 23 2024

ரணிலை சந்தித்த தமிழ் எம்.பிகள்- பச்சை துரோகமான செயல் - கஜேந்திரன் சீற்றம்...!

Sharmi / Aug 14th 2024, 10:08 am
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள்இ 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வாக்குறுதியை பெற்றுக்கொண்டு வந்திருப்பது பச்சை துரோகமான செயல் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்றையதினம்(13)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'பொதுவேட்பாளர் என்பது என்னைப் பொறுத்தவரையில் திட்டமிட்ட நாடகம். பொதுவேட்பாளர்களை முன்னிறுத்திய சிவில் அமைப்புகளும் கட்சி சார்ந்தவர்களும் கடந்த 15 வருடங்களாக ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்த சட்டத்தை திணிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு முழுமையாக உறுதுணையாக செயல்பட்டவர்கள்.

குறிப்பாக, விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் இந்தியாவின் கைக்கூலிகள். 

இவர்கள் கடந்த காலங்களில் 13ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்களை அனுப்பியவர்கள்.

13 ஆவது திருத்த சட்டத்தை வலியுறுத்திய தரப்புக்கு விளைவுகள் ஏற்படாமல் இருக்கவும் - மக்கள் மத்தியிலிருந்துவேறுபடாமல் இருக்கவும் - அவர்களை பேணி பாதுகாத்து தொடர்ந்தும் மக்களை அவர்களுடன் வைத்திருப்பதற்கான செயல்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

பொது வேட்பாளர் என்ற ஒருவரை நிறுத்திவிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருக்கின்றனர். 

குறிப்பாக, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தனுக்கு விசேட நிதி வழங்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுக்கு யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வாக்குறுதியை பெற்றுக்கொண்டு வந்திருக்கின்றனர்.

இவர்கள் செய்தது பச்சை துரோகமான செயலாகும்.

இவர்கள் இந்தியாவின் நலனை பேணக்கூடிய நபர்களுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையிலும் இந்த ஆட்சியாளர்களின்மீது அதிருப்தி அடைந்து - ஏமாற்று வேலையை புரிந்து கொண்டு தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்து தேர்தலில் ஒதுங்கி விடக்கூடாது என்பதற்கான நாடகம் தான் பொது வேட்பாளர்.

தற்போது பொதுவேட்பாளராக தெரிவான அரியநேத்திரன் 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்து சம்பந்தர், சுமந்திரனோடு இணைந்து அனைத்துத் துரோக செயல்பாடுகளுக்கும் துணை நின்றவர் என்றும் தெரிவித்தார்.

ரணிலை சந்தித்த தமிழ் எம்.பிகள்- பச்சை துரோகமான செயல் - கஜேந்திரன் சீற்றம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள்இ 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வாக்குறுதியை பெற்றுக்கொண்டு வந்திருப்பது பச்சை துரோகமான செயல் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.வவுனியாவில் நேற்றையதினம்(13)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.'பொதுவேட்பாளர் என்பது என்னைப் பொறுத்தவரையில் திட்டமிட்ட நாடகம். பொதுவேட்பாளர்களை முன்னிறுத்திய சிவில் அமைப்புகளும் கட்சி சார்ந்தவர்களும் கடந்த 15 வருடங்களாக ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்த சட்டத்தை திணிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு முழுமையாக உறுதுணையாக செயல்பட்டவர்கள்.குறிப்பாக, விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் இந்தியாவின் கைக்கூலிகள். இவர்கள் கடந்த காலங்களில் 13ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்களை அனுப்பியவர்கள்.13 ஆவது திருத்த சட்டத்தை வலியுறுத்திய தரப்புக்கு விளைவுகள் ஏற்படாமல் இருக்கவும் - மக்கள் மத்தியிலிருந்துவேறுபடாமல் இருக்கவும் - அவர்களை பேணி பாதுகாத்து தொடர்ந்தும் மக்களை அவர்களுடன் வைத்திருப்பதற்கான செயல்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.பொது வேட்பாளர் என்ற ஒருவரை நிறுத்திவிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருக்கின்றனர். குறிப்பாக, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தனுக்கு விசேட நிதி வழங்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுக்கு யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த சந்திப்பின்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வாக்குறுதியை பெற்றுக்கொண்டு வந்திருக்கின்றனர்.இவர்கள் செய்தது பச்சை துரோகமான செயலாகும்.இவர்கள் இந்தியாவின் நலனை பேணக்கூடிய நபர்களுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையிலும் இந்த ஆட்சியாளர்களின்மீது அதிருப்தி அடைந்து - ஏமாற்று வேலையை புரிந்து கொண்டு தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்து தேர்தலில் ஒதுங்கி விடக்கூடாது என்பதற்கான நாடகம் தான் பொது வேட்பாளர்.தற்போது பொதுவேட்பாளராக தெரிவான அரியநேத்திரன் 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்து சம்பந்தர், சுமந்திரனோடு இணைந்து அனைத்துத் துரோக செயல்பாடுகளுக்கும் துணை நின்றவர் என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement