• Apr 28 2024

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது இலங்கை தமிழரசு கட்சி மட்டுமே- சுமந்திரன் எம்.பி விளக்கம்!

Sharmi / Feb 10th 2023, 2:34 pm
image

Advertisement

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதே தமிழரசு கட்சியே எனவும் வீட்டுச் சின்னம் என்றாலே தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் என்றும் இதனை குழப்பவே பல முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபைக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் ஒற்றையாட்சி கட்சி என்றும் ஆனால் அவர்கள் இப்போது சமஸ்டி என்று பேசுவதாகவும் எனவே அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமஸ்டியிலிருந்து தமிழ் மக்கள் சற்றேனும் தளரவில்லை என்பதை மக்கள் தமிழ் நிரூபிக்கின்ற தேர்தலாக இது அமையவேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார்.

தற்போது சில கட்சிகள் தமது பெயர்களை மாற்றிக்கொண்டு தாம் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று மக்களை குழப்புவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது இலங்கை தமிழரசு கட்சி மட்டுமே- சுமந்திரன் எம்.பி விளக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதே தமிழரசு கட்சியே எனவும் வீட்டுச் சின்னம் என்றாலே தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் என்றும் இதனை குழப்பவே பல முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இன்று காலை திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபைக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் ஒற்றையாட்சி கட்சி என்றும் ஆனால் அவர்கள் இப்போது சமஸ்டி என்று பேசுவதாகவும் எனவே அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சமஸ்டியிலிருந்து தமிழ் மக்கள் சற்றேனும் தளரவில்லை என்பதை மக்கள் தமிழ் நிரூபிக்கின்ற தேர்தலாக இது அமையவேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார்.தற்போது சில கட்சிகள் தமது பெயர்களை மாற்றிக்கொண்டு தாம் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று மக்களை குழப்புவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement