• Nov 25 2024

தமிழ் தேசிய கட்சிகள் தமிழ் மக்களுக்கான தீர்வுக்காக ஒன்றுபட வேண்டும்...!லவகுசராசா வலியுறுத்து...!samugammedia

Sharmi / Jan 27th 2024, 10:41 am
image

வடக்கு கிழக்கிலே 76 வருட காலமாக இருந்து கொண்டிருக்கின்ற தேசிய இன பிரச்சனைக்கான அரசியல் தீர்வை நோக்கிய பாதையிலே வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு பயணித்துக் கொண்டிருக்கிறது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தெரிவித்துள்ளார்.

இன்று திருகோணமலையில், தமிழ் தேசிய கட்சிகள் தமிழ் மக்களுக்கான தீர்வுக்காக ஒன்றுபட வேண்டும் என்ற பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது வடகிழக்கிலே இருக்கிற பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் தீர்வாக மீளப்பெற முடியாத வகையிலான சமஸ்டி முறையான அதிகார பகிர்வை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

அந்த அடிப்படையிலேயே குறிப்பாக நாங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து கொண்டு வந்திருந்தாலும் கூட அண்மையிலேயே அரசியல் கட்சிகளின் தலைமைகள் மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டு கொண்டிருக்கிற ஒரு சூழ்நிலையில் நாங்கள் இந்த தமிழ் அரசியல் தலைமைகளுக்கு சில 11 வகையான பரிந்துரைகளை நாங்கள் முன் வைத்திருக்கின்றோம்.

எங்கள் மக்கள் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களை நாங்கள் எழுதுவதாக இருந்தால் கட்டாயம் இந்த 11 விடயங்களையும் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் தமிழரசி கட்சி தொடக்கம் ஏனைய தமிழ் காட்சிகள் இடத்தில் நாங்கள் கொண்டு சென்று இருக்கின்றோம்.

அந்த அடிப்படையிலே இன்றும் நாளைய தினமும் தமிழரசு கட்சி இந்த மாநாடுகள் திருகோணமலை இடம்பெற்றுக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் எம்மால் தயாரிக்கப்பட்டு இருக்கின்ற இந்த அனைத்து தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்திற்கு என்று சொல்லப்படுகின்ற இந்த அறிக்கையை நாங்கள் இந்த உறுப்பினர்களிடத்தில் விநியோகித்துக் கொண்டிருக்கின்றோம்.

 அதேபோன்று இன்று திருகோணமலையில் ஆரம்பிக்கப்படுகின்ற இந்த பிரச்சாரத்தை வடகிழக்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாகாணத்தில் எட்டு மாவட்டத்திலும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

குறிப்பாக வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களிடத்தில் நாங்கள் நல்லுறவை ஏற்படுத்தி அவர்களின் ஆதரவுகளுடன் தான் நாங்கள் இந்த அரசியல் தீர்வினை நாங்கள் பெறக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.

அந்த அடிப்படையிலே நாங்கள் இந்த அரசியல் கட்சிகளிடம் நாங்கள் கோரி இருக்கிறோம். இங்கே வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் மாத்திரம் அல்லாமல் முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களிடம் இந்த சந்திப்புகள் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

அவர்களுடன் நான் சந்திப்புகளையும் நீங்கள் மேற்கொள்வதன் ஊடாகத்தான் இங்கு மக்கள் என்ற அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள் அந்த மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படும். ஆகவே இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாங்கள் இந்த இடத்தில் வலியுறுத்தி நிற்கின்றோம் என்றார்.



தமிழ் தேசிய கட்சிகள் தமிழ் மக்களுக்கான தீர்வுக்காக ஒன்றுபட வேண்டும்.லவகுசராசா வலியுறுத்து.samugammedia வடக்கு கிழக்கிலே 76 வருட காலமாக இருந்து கொண்டிருக்கின்ற தேசிய இன பிரச்சனைக்கான அரசியல் தீர்வை நோக்கிய பாதையிலே வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு பயணித்துக் கொண்டிருக்கிறது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தெரிவித்துள்ளார்.இன்று திருகோணமலையில், தமிழ் தேசிய கட்சிகள் தமிழ் மக்களுக்கான தீர்வுக்காக ஒன்றுபட வேண்டும் என்ற பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது வடகிழக்கிலே இருக்கிற பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் தீர்வாக மீளப்பெற முடியாத வகையிலான சமஸ்டி முறையான அதிகார பகிர்வை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.அந்த அடிப்படையிலேயே குறிப்பாக நாங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து கொண்டு வந்திருந்தாலும் கூட அண்மையிலேயே அரசியல் கட்சிகளின் தலைமைகள் மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டு கொண்டிருக்கிற ஒரு சூழ்நிலையில் நாங்கள் இந்த தமிழ் அரசியல் தலைமைகளுக்கு சில 11 வகையான பரிந்துரைகளை நாங்கள் முன் வைத்திருக்கின்றோம்.எங்கள் மக்கள் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களை நாங்கள் எழுதுவதாக இருந்தால் கட்டாயம் இந்த 11 விடயங்களையும் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் தமிழரசி கட்சி தொடக்கம் ஏனைய தமிழ் காட்சிகள் இடத்தில் நாங்கள் கொண்டு சென்று இருக்கின்றோம்.அந்த அடிப்படையிலே இன்றும் நாளைய தினமும் தமிழரசு கட்சி இந்த மாநாடுகள் திருகோணமலை இடம்பெற்றுக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் எம்மால் தயாரிக்கப்பட்டு இருக்கின்ற இந்த அனைத்து தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்திற்கு என்று சொல்லப்படுகின்ற இந்த அறிக்கையை நாங்கள் இந்த உறுப்பினர்களிடத்தில் விநியோகித்துக் கொண்டிருக்கின்றோம். அதேபோன்று இன்று திருகோணமலையில் ஆரம்பிக்கப்படுகின்ற இந்த பிரச்சாரத்தை வடகிழக்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாகாணத்தில் எட்டு மாவட்டத்திலும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.குறிப்பாக வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களிடத்தில் நாங்கள் நல்லுறவை ஏற்படுத்தி அவர்களின் ஆதரவுகளுடன் தான் நாங்கள் இந்த அரசியல் தீர்வினை நாங்கள் பெறக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.அந்த அடிப்படையிலே நாங்கள் இந்த அரசியல் கட்சிகளிடம் நாங்கள் கோரி இருக்கிறோம். இங்கே வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் மாத்திரம் அல்லாமல் முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களிடம் இந்த சந்திப்புகள் பரிந்துரைக்கப்பட வேண்டும். அவர்களுடன் நான் சந்திப்புகளையும் நீங்கள் மேற்கொள்வதன் ஊடாகத்தான் இங்கு மக்கள் என்ற அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள் அந்த மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படும். ஆகவே இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாங்கள் இந்த இடத்தில் வலியுறுத்தி நிற்கின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement