தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு சம்பூர் -கலாசார மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (01) காலை இடம்பெற்றது.
இதில் முதன்மை அதிதியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலைக மாவட்ட வேட்பாளர்களான கதிர்காமத்தம்பி வீரபத்திரன், கிறிஸ்ணப்பிள்ளை சிறி பிரசாத், கணேசப்பிள்ளை குகன், கணேசலிங்கம் சிந்துஜன்,நவரெத்தினராசா ஹரிகரகுமார், நாகப்பன் இதயசீலன், திலகேஸ்வரன் லோஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றுகையில் -
தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்று ஊடகங்கள் ஜனாதிபதியிடம் கேட்டபோது அது அரசியல் அமைப்பினூடாக மாற்ற வேண்டுமென அதற்கு சரியான பதிலை அவர் வழங்கவில்லை.
இடைக்கால அறிக்கையில் இலங்கை ஒற்றையாட்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.அது தமிழில் வேறு அர்த்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒற்றையாட்சி இருக்கமான முறை என தெரிவித்தார்.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான Jvp , சுனாமி ஏற்பட்டு தமிழ் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டபோது நிவாரணம் வந்தபோது தடுத்தவர்கள்.வடகிழக்கு பிரிந்து இருக்க வேண்டுமென சொன்னர்கள்.இவர்கள் பிற்போக்குகாரர்கள்.
இந்த தேர்தலின் பின்னர் தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால் மக்கள் தமது வாக்கை சரியாக பயன்படுத்த வேண்டும்.16 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள்.சுமந்திரன் சம்பந்தனின் சிஷ்யன் என்றார்.
சுதந்திரத்திற்கு பின் 3 அரசியல் அமைப்புக்கள் கொண்டு வந்தும் அது ஒற்றையாட்சி என்பதால் எதிர்த்தார்கள்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு சம்பூர் -கலாசார மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (01) காலை இடம்பெற்றது.இதில் முதன்மை அதிதியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலைக மாவட்ட வேட்பாளர்களான கதிர்காமத்தம்பி வீரபத்திரன், கிறிஸ்ணப்பிள்ளை சிறி பிரசாத், கணேசப்பிள்ளை குகன், கணேசலிங்கம் சிந்துஜன்,நவரெத்தினராசா ஹரிகரகுமார், நாகப்பன் இதயசீலன், திலகேஸ்வரன் லோஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.அத்தோடு திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றுகையில் -தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்று ஊடகங்கள் ஜனாதிபதியிடம் கேட்டபோது அது அரசியல் அமைப்பினூடாக மாற்ற வேண்டுமென அதற்கு சரியான பதிலை அவர் வழங்கவில்லை.இடைக்கால அறிக்கையில் இலங்கை ஒற்றையாட்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.அது தமிழில் வேறு அர்த்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒற்றையாட்சி இருக்கமான முறை என தெரிவித்தார்.அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான Jvp , சுனாமி ஏற்பட்டு தமிழ் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டபோது நிவாரணம் வந்தபோது தடுத்தவர்கள்.வடகிழக்கு பிரிந்து இருக்க வேண்டுமென சொன்னர்கள்.இவர்கள் பிற்போக்குகாரர்கள்.இந்த தேர்தலின் பின்னர் தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால் மக்கள் தமது வாக்கை சரியாக பயன்படுத்த வேண்டும்.16 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள்.சுமந்திரன் சம்பந்தனின் சிஷ்யன் என்றார்.சுதந்திரத்திற்கு பின் 3 அரசியல் அமைப்புக்கள் கொண்டு வந்தும் அது ஒற்றையாட்சி என்பதால் எதிர்த்தார்கள்.