• Apr 24 2024

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு!

Tamil nila / Feb 2nd 2023, 9:46 pm
image

Advertisement

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று (02.02.2023) மாலை இடம்பெற்றது.


வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இந்நிகழ்வு இடம்பெற்றது.



நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி கட்சியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதன்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் கட்சியின் கொள்கைகள் , செயற்பாடுகள் தொடர்பாகவும் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பிலும் வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.



இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் , பிரச்சார செயலாளர் சட்டத்தரணி சு.காண்டீபன், கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள், வேட்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று (02.02.2023) மாலை இடம்பெற்றது.வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இந்நிகழ்வு இடம்பெற்றது.நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி கட்சியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதன்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் கட்சியின் கொள்கைகள் , செயற்பாடுகள் தொடர்பாகவும் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பிலும் வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் , பிரச்சார செயலாளர் சட்டத்தரணி சு.காண்டீபன், கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள், வேட்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement