• Sep 22 2024

மயிலுத்தமடு மாதவனையில் அத்துமீறிய காணி அபகரிப்புக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்...!samugammedia

Anaath / Nov 5th 2023, 3:37 pm
image

Advertisement

மட்டக்களப்பு மயிலுத்தமடு மாதவனை பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பை கண்டிப்பதாக தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார்

 மட்டக்களப்பு மயிலுத்தமடு,மாதவனை பகுதிகளில்கால்நடை வளர்ப்பவர்கள் பயன்படுத்தி வந்த நிலப்பகுதிகளை அம்பாறை மற்றும் பொலனறுவை ஆகிய இடங்களில் இருந்து அங்கு  வருகை தந்த சிங்கள மக்கள் அத்து மீறி காணிகளை அபகரித்து விவசாய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பவர்களின் கால்நடைகளை தாக்கி அநாகரிமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் மயிலுத்தமடு மக்கள் வாழ்வாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றனர் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் எடுத்து அத்துமீறிய காணி அபகரிப்பை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமக்கான நீதி கோரி  மட்டக்களப்பு கால்நடை பணியாளர்கள் 50 நாட்கள் கடந்து கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஆதரவு வழங்குவதாகவும், குறித்த போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைக்கு மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண ஆளுநர் மாவட்ட செயலாளர் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் ச.கீதன் மேலும் தெரிவித்துள்ளார்.

மயிலுத்தமடு மாதவனையில் அத்துமீறிய காணி அபகரிப்புக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்.samugammedia மட்டக்களப்பு மயிலுத்தமடு மாதவனை பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பை கண்டிப்பதாக தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு மயிலுத்தமடு,மாதவனை பகுதிகளில்கால்நடை வளர்ப்பவர்கள் பயன்படுத்தி வந்த நிலப்பகுதிகளை அம்பாறை மற்றும் பொலனறுவை ஆகிய இடங்களில் இருந்து அங்கு  வருகை தந்த சிங்கள மக்கள் அத்து மீறி காணிகளை அபகரித்து விவசாய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பவர்களின் கால்நடைகளை தாக்கி அநாகரிமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் மயிலுத்தமடு மக்கள் வாழ்வாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றனர் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் எடுத்து அத்துமீறிய காணி அபகரிப்பை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.தமக்கான நீதி கோரி  மட்டக்களப்பு கால்நடை பணியாளர்கள் 50 நாட்கள் கடந்து கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஆதரவு வழங்குவதாகவும், குறித்த போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைக்கு மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண ஆளுநர் மாவட்ட செயலாளர் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் ச.கீதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement