• May 18 2024

மோடியை சந்திப்பதற்கு தயாராகும் தமிழ்க் கட்சிகள்...! விக்னேஸ்வரன் வீட்டில் முக்கிய கூட்டம்...!samugammedia

Sharmi / Oct 12th 2023, 10:47 am
image

Advertisement

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ் மக்களின் நிலைகள் குறித்து தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கு தமிழ் தேசிய கட்சிகளைச் சேர்ந்த ஏழு கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை அனுப்பத் தயாராக உள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா விவகாரம் தொடர்பில் வெளிநாட்டு தூதர்கள், ஐ.நாவுக்கு அனுப்பவுள்ள கடிதத்தின் இறுதி வரைவை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், யாழ்ப்பாணத்தில் நேற்று அவரது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உடனடியாக கடிதத்தை அனுப்புவதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாங்கள் மீளவும் கூடியே தீர்மானம் எடுக்கவுள்ளோம்.

இன்று சில கட்சி தலைவர்கள் வருகைதராமையின் காரணமாக இறுதி முடிவு எட்டப்படவில்லை.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்கு காணப்படுகின்றது.

தற்பொழுது நாட்டின் நிலை குறித்தும்,தமிழ் மக்களது நிலை குறித்தும் 13ஐ அமுல்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் அவருடன் பேச நாம் விருப்பமாக இருக்கின்றோம்.

தமிழ் மக்கள் கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி ,ரெலோ, புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எவ், ஜனநாயகப் போராளிகள் கட்சி,தமிழ் தேசிய கட்சி ஆகியகட்சிகள் இணைந்து இந்த செயற்
பாட்டை முன்னெடுத்துள்ளோம்.

கட்சித் தலைவர்கள் அனைவரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கின்ற பொழுதுதான் இது முழுமையான செயல்வடிவம் பெறும் எனவும் தெரிவித்தார்.

மோடியை சந்திப்பதற்கு தயாராகும் தமிழ்க் கட்சிகள். விக்னேஸ்வரன் வீட்டில் முக்கிய கூட்டம்.samugammedia இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ் மக்களின் நிலைகள் குறித்து தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கு தமிழ் தேசிய கட்சிகளைச் சேர்ந்த ஏழு கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை அனுப்பத் தயாராக உள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா விவகாரம் தொடர்பில் வெளிநாட்டு தூதர்கள், ஐ.நாவுக்கு அனுப்பவுள்ள கடிதத்தின் இறுதி வரைவை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், யாழ்ப்பாணத்தில் நேற்று அவரது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,உடனடியாக கடிதத்தை அனுப்புவதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாங்கள் மீளவும் கூடியே தீர்மானம் எடுக்கவுள்ளோம்.இன்று சில கட்சி தலைவர்கள் வருகைதராமையின் காரணமாக இறுதி முடிவு எட்டப்படவில்லை.13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்கு காணப்படுகின்றது.தற்பொழுது நாட்டின் நிலை குறித்தும்,தமிழ் மக்களது நிலை குறித்தும் 13ஐ அமுல்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் அவருடன் பேச நாம் விருப்பமாக இருக்கின்றோம்.தமிழ் மக்கள் கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி ,ரெலோ, புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எவ், ஜனநாயகப் போராளிகள் கட்சி,தமிழ் தேசிய கட்சி ஆகியகட்சிகள் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம்.கட்சித் தலைவர்கள் அனைவரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கின்ற பொழுதுதான் இது முழுமையான செயல்வடிவம் பெறும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement