• Apr 28 2024

இனப் பிரச்சினை பேச்சுவார்த்தையை தமிழ் தரப்புக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்- ஆறு. திருமுருகன் கோரிக்கை!

Sharmi / Jan 2nd 2023, 3:46 pm
image

Advertisement

இன்றைய சூழலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம் முன் வந்திருப்பது என்பது உண்மையில் வரவேற்கத்தக்க விடயமாகும்.இந்த நேரத்தில் தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும் ஒன்றுபட்டு  ஒற்றுமையாக தமிழர்களுடைய பிரச்சினைகள் தீர வேண்டும் என்ற நோக்கோடு ஒருமித்த குரலாக தமது ஆற்றல்களை பயன்படுத்த வேண்டும் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.

சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனவே கட்சிகள் சாராது ஒரு ஆன்மிகம் சார்ந்த,பொது மகன் என்ற வகையில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள் சார்ந்தவர்களையும் அன்பாக வேண்டிக்கொள்வது என்னவெனில், நாடு பொருளாதார ரீதியில் மிக மோசமாக வீழ்ச்சியடைந்த நிலையில் தற்சமயம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை எட்டுவதற்காக தமிழர் தரப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கும  சந்தர்ப்பத்தை பயனுள்ளதாகப் பயன்படுத்துவதே சிறந்ததாகும்.

கடந்த காலத்தில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் மூலம் முழுமையான தீர்வினை பெற்றுக்கொள்ள இயலாமல் இருப்பினும் இச் சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தவுடனே ஒவ்வொரு தரப்பினரும் மறைமுகமான கருத்துக்களை முன்வைத்துக்கொண்டிருக்காமல் தமிழர் தரப்பினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சியினரும் தேர்தல் நோக்க அரசியலைக் கைவிட்டு மக்கள் நலன் சார் விடயத்திற்கு முன்னுரிமையளித்து ஒன்றுபடுதல் கட்டாயமான விடயமாகும். 

இந்த வேளையிலும் நாங்கள் ஒவ்வொரு கட்சியாக பிரிந்து ஊடகங்களுக்கு வெவ்வேறு கருத்துக்களை சொல்லி அப்பாவி பொதுமக்களை மக்களை குழப்புகின்ற தன்மை மிகவும் கவலையளிக்கிறது. தேர்தல் குறித்து தமிழ் மக்கள் ஆர்வம் செலுத்தவில்லை . அனைத்து தமிழ் மக்களும் இப்போது எதிர்பார்ப்பது இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டும் என்பதேயாகும். நாங்கள் ஒன்றுபடா விட்டால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.எங்களுடைய எதிர்கலாம் பற்றிய கேள்வி கேள்விக்குறியாகவே உள்ளன.

எனவே கட்சிகளுக்குள்ளே பல்வேறு பிரச்சினைகள் காணப்படினும் அனைவரும் கல்விமான்கள் ,சட்ட ரீதியில் புலமையுடையோர்,மதத்தலைவர்கள் ,பேராசிரியர்கள்,அனுபவம் உள்ள பெரியோர்கள் மற்றும் நிர்வாகத் திறமையுடைய அதிகாரிகள் போன்றோருடன் பொது வெளியில் அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தமிழர் தீர்வு விடயத்தில் ஒரு அணியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்ததைக்கு முற்படும் போது எம் தரப்பினரின் பலம் மிக வலுவானதாக தீர்வுக்கு சாதக நிலைப்பாட்டை எட்டக்கூடியதாக அமையும். 

 இவ்வாறு பேச்சவார்த்தைக்கு தயாராக முதல் மக்களின் நீண்ட பிரச்சினையாக உள்ள இராணுவப் படையினரிடமுள்ள காணி விடுவிப்பு மற்றும் காணாமல் போனோர் பிரச்சினைகளும்கு தீர்வை எட்டி சாதக நிலையுடனே பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தருணம் தமிழர் தரப்பிலிருந்து கூடுதல் அழுத்தங்களைப் பிரயோகிக்க வழிகாட்டும்.  எனவே இச் சந்தர்ப்பத்தை பயனுடையதாகப் பயன்படுத்துவதற்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைவரும் ஓரணியில் செயற்படுமாறு பொதுமகன் என்ற ரீதியில் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

இனப் பிரச்சினை பேச்சுவார்த்தையை தமிழ் தரப்புக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்- ஆறு. திருமுருகன் கோரிக்கை இன்றைய சூழலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம் முன் வந்திருப்பது என்பது உண்மையில் வரவேற்கத்தக்க விடயமாகும்.இந்த நேரத்தில் தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும் ஒன்றுபட்டு  ஒற்றுமையாக தமிழர்களுடைய பிரச்சினைகள் தீர வேண்டும் என்ற நோக்கோடு ஒருமித்த குரலாக தமது ஆற்றல்களை பயன்படுத்த வேண்டும் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,எனவே கட்சிகள் சாராது ஒரு ஆன்மிகம் சார்ந்த,பொது மகன் என்ற வகையில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள் சார்ந்தவர்களையும் அன்பாக வேண்டிக்கொள்வது என்னவெனில், நாடு பொருளாதார ரீதியில் மிக மோசமாக வீழ்ச்சியடைந்த நிலையில் தற்சமயம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை எட்டுவதற்காக தமிழர் தரப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கும  சந்தர்ப்பத்தை பயனுள்ளதாகப் பயன்படுத்துவதே சிறந்ததாகும்.கடந்த காலத்தில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் மூலம் முழுமையான தீர்வினை பெற்றுக்கொள்ள இயலாமல் இருப்பினும் இச் சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தவுடனே ஒவ்வொரு தரப்பினரும் மறைமுகமான கருத்துக்களை முன்வைத்துக்கொண்டிருக்காமல் தமிழர் தரப்பினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சியினரும் தேர்தல் நோக்க அரசியலைக் கைவிட்டு மக்கள் நலன் சார் விடயத்திற்கு முன்னுரிமையளித்து ஒன்றுபடுதல் கட்டாயமான விடயமாகும். இந்த வேளையிலும் நாங்கள் ஒவ்வொரு கட்சியாக பிரிந்து ஊடகங்களுக்கு வெவ்வேறு கருத்துக்களை சொல்லி அப்பாவி பொதுமக்களை மக்களை குழப்புகின்ற தன்மை மிகவும் கவலையளிக்கிறது. தேர்தல் குறித்து தமிழ் மக்கள் ஆர்வம் செலுத்தவில்லை . அனைத்து தமிழ் மக்களும் இப்போது எதிர்பார்ப்பது இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டும் என்பதேயாகும். நாங்கள் ஒன்றுபடா விட்டால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.எங்களுடைய எதிர்கலாம் பற்றிய கேள்வி கேள்விக்குறியாகவே உள்ளன.எனவே கட்சிகளுக்குள்ளே பல்வேறு பிரச்சினைகள் காணப்படினும் அனைவரும் கல்விமான்கள் ,சட்ட ரீதியில் புலமையுடையோர்,மதத்தலைவர்கள் ,பேராசிரியர்கள்,அனுபவம் உள்ள பெரியோர்கள் மற்றும் நிர்வாகத் திறமையுடைய அதிகாரிகள் போன்றோருடன் பொது வெளியில் அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தமிழர் தீர்வு விடயத்தில் ஒரு அணியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்ததைக்கு முற்படும் போது எம் தரப்பினரின் பலம் மிக வலுவானதாக தீர்வுக்கு சாதக நிலைப்பாட்டை எட்டக்கூடியதாக அமையும்.  இவ்வாறு பேச்சவார்த்தைக்கு தயாராக முதல் மக்களின் நீண்ட பிரச்சினையாக உள்ள இராணுவப் படையினரிடமுள்ள காணி விடுவிப்பு மற்றும் காணாமல் போனோர் பிரச்சினைகளும்கு தீர்வை எட்டி சாதக நிலையுடனே பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தருணம் தமிழர் தரப்பிலிருந்து கூடுதல் அழுத்தங்களைப் பிரயோகிக்க வழிகாட்டும்.  எனவே இச் சந்தர்ப்பத்தை பயனுடையதாகப் பயன்படுத்துவதற்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைவரும் ஓரணியில் செயற்படுமாறு பொதுமகன் என்ற ரீதியில் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement