• Sep 19 2024

சித்திரவதை செய்யப்பட்டும் தமிழ் அரசியல் கைதிகள்! சட்டத்தரணி வெளியிட்ட பகீர் தகவல் samugammedia

Chithra / May 8th 2023, 11:05 am
image

Advertisement

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் தமிழ் அரசியல் கைதிகள், கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டே, காவல்துறையினரால் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதாக, சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்தார்.

யாழ்.பொது நூலகத்தில் அண்மையில் இடம்பெற்ற உழைக்கும் மகளிர் அமைப்பின் மகளிர் தின நிகழ்வில், பயங்கரவாதச் சட்டம் தொடர்பில் சிறப்புரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்த போது,

தற்போது நடைமுறையிலுள்ள 1978 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப் பட்ட 48ஆம் இலக்க பயங்கரவாதச் தடைச் சட்டமானது, நாடாளுமன்றத்தில் சட்டமூலமாகச் சமர்ப்பிக்கப்பட்டு, ஒரே நாளில் சட்டமாகிய வரலாறு தற்போதய பயங்கரவாத தடைச் சட்டத்திற்குரியது.

குறித்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் எதிர்க்க, ஏனையவர்களின் ஆதரவுடன் சட்டமாகியது.

இந்தச் சட்டம் தமிழ் இளைஞர்களை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட சட்டமாகப் பார்க்கப்படும் நிலையில், தற்போது சிங்கள இளைஞர்களையும் அடக்குவதற்காக குறித்த சட்டம் பிரயோகிக்கப்படுகின்றது.

பயங்கரவாத நடை சட்டத்தின் கீழ்,18 மாதங்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் தடுத்து வைக்கும் அதிகாரத்தை குறித்த சட்டம் வழங்குவதுடன், பல்வேறு கொடூரமான சித்திரவதைகளை மேற்கொண்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்.

பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றத்தில் முன்னனிலையாகும் காவல்துறையினர், தமிழ் அரசியல் கைதிகளை சித்திரவதைகளை மேற்கொண்டே, குற்றஒப்புதல் வாக்கு மூலங்களைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றனர்.

இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை நிராகரித்து, ஆதாரங்களுடன் நீதிமன்றில் சமர்ப்பிக்க நீண்டகாலம் செல்லும் தமிழ் அரசியல் கைதிகளாக, ஏறக்குறைய பத்து வருடங்கள் கடந்த போதிலும், சிறைகளில் இருப்பவர்கள் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்படுவதால், நீதிமன்றத்தின் மூலம் பல வருடங்கள் தாண்டி விடு விக்கப்பட்டாலும்,சில வருடங்களில் அவர்கள் இறந்து போகும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகிறது.

பயங்கரவாத தடைச் சட்டம் என்றால் என்னவென்பது தொடர்பில், சிங்களச் சகோதரர்களும் ஆழமாக அறிந்துள்ள நிலையில்,தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கப் போகின்றோம் எனக் கூறி, தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதச் சட்டத்தை தொடர்ச்சியாக செயற்படுத்துவதற்கு முனைகின்றனர்.

எனவே,அடக்கு முறைகளுக்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்தை, முற்று முழுதாக நீக்குவதற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைத் தோற் கடிப்பதற்கு,கட்சி,இன பேதங்களுக்கு அப்பால்.அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.என தெரிவித்தார்.

சித்திரவதை செய்யப்பட்டும் தமிழ் அரசியல் கைதிகள் சட்டத்தரணி வெளியிட்ட பகீர் தகவல் samugammedia பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் தமிழ் அரசியல் கைதிகள், கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டே, காவல்துறையினரால் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதாக, சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்தார்.யாழ்.பொது நூலகத்தில் அண்மையில் இடம்பெற்ற உழைக்கும் மகளிர் அமைப்பின் மகளிர் தின நிகழ்வில், பயங்கரவாதச் சட்டம் தொடர்பில் சிறப்புரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்த போது,தற்போது நடைமுறையிலுள்ள 1978 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப் பட்ட 48ஆம் இலக்க பயங்கரவாதச் தடைச் சட்டமானது, நாடாளுமன்றத்தில் சட்டமூலமாகச் சமர்ப்பிக்கப்பட்டு, ஒரே நாளில் சட்டமாகிய வரலாறு தற்போதய பயங்கரவாத தடைச் சட்டத்திற்குரியது.குறித்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் எதிர்க்க, ஏனையவர்களின் ஆதரவுடன் சட்டமாகியது.இந்தச் சட்டம் தமிழ் இளைஞர்களை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட சட்டமாகப் பார்க்கப்படும் நிலையில், தற்போது சிங்கள இளைஞர்களையும் அடக்குவதற்காக குறித்த சட்டம் பிரயோகிக்கப்படுகின்றது.பயங்கரவாத நடை சட்டத்தின் கீழ்,18 மாதங்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் தடுத்து வைக்கும் அதிகாரத்தை குறித்த சட்டம் வழங்குவதுடன், பல்வேறு கொடூரமான சித்திரவதைகளை மேற்கொண்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்.பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றத்தில் முன்னனிலையாகும் காவல்துறையினர், தமிழ் அரசியல் கைதிகளை சித்திரவதைகளை மேற்கொண்டே, குற்றஒப்புதல் வாக்கு மூலங்களைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றனர்.இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை நிராகரித்து, ஆதாரங்களுடன் நீதிமன்றில் சமர்ப்பிக்க நீண்டகாலம் செல்லும் தமிழ் அரசியல் கைதிகளாக, ஏறக்குறைய பத்து வருடங்கள் கடந்த போதிலும், சிறைகளில் இருப்பவர்கள் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்படுவதால், நீதிமன்றத்தின் மூலம் பல வருடங்கள் தாண்டி விடு விக்கப்பட்டாலும்,சில வருடங்களில் அவர்கள் இறந்து போகும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகிறது.பயங்கரவாத தடைச் சட்டம் என்றால் என்னவென்பது தொடர்பில், சிங்களச் சகோதரர்களும் ஆழமாக அறிந்துள்ள நிலையில்,தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கப் போகின்றோம் எனக் கூறி, தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதச் சட்டத்தை தொடர்ச்சியாக செயற்படுத்துவதற்கு முனைகின்றனர்.எனவே,அடக்கு முறைகளுக்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்தை, முற்று முழுதாக நீக்குவதற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைத் தோற் கடிப்பதற்கு,கட்சி,இன பேதங்களுக்கு அப்பால்.அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement