• May 03 2024

பேஸ்புக் மூலம் காதல் - லண்டனில் இருந்து இலங்கை வந்த தமிழ் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு..! - பிரேத பரிசோதனை இன்று! samugammedia

Chithra / Sep 10th 2023, 9:06 am
image

Advertisement

கல்கிசை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து உயிரிழந்த பிரித்தானிய பெண்ணின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்கிசை - அல்விஸ் மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13 ஆவது மாடியில் இருந்து நேற்று அதிகாலை 2.40 அளவில் பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கல்கிசை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், வெல்லவத்தையில் வசிக்கும் 29 வயதான தமது நண்பரை சந்திப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி குறித்த பெண் இலங்கை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இருவரும் ஃபேஸ்புக் சமூக வலைதளம் மூலம் காதல் தொடர்புகளை பேணிவந்துள்ளதுடன்,பிரித்தானிய குடியுரிமை பெற்ற குறித்த பெண் 29 வயதுடைய தமது காதலனுடன் 6 மாதங்களாக கல்கிசையில் தங்கியுள்ளார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், குறித்த பெண் நேற்று காலை இங்கிலாந்து திரும்பவிருந்த வேளையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதன்பின்னர், இந்த சம்பவ இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நேற்று பிற்பகல் சம்பவம் இடம்பெற்ற இடத்தை கல்கிசை பதில் நீதவான் ரத்ன கமகே பார்வையிட்டுள்ளார்.

இன்றைய தினம் பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய முடியும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


பேஸ்புக் மூலம் காதல் - லண்டனில் இருந்து இலங்கை வந்த தமிழ் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு. - பிரேத பரிசோதனை இன்று samugammedia கல்கிசை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து உயிரிழந்த பிரித்தானிய பெண்ணின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கல்கிசை - அல்விஸ் மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13 ஆவது மாடியில் இருந்து நேற்று அதிகாலை 2.40 அளவில் பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கல்கிசை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அதற்கமைய, காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், வெல்லவத்தையில் வசிக்கும் 29 வயதான தமது நண்பரை சந்திப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி குறித்த பெண் இலங்கை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இருவரும் ஃபேஸ்புக் சமூக வலைதளம் மூலம் காதல் தொடர்புகளை பேணிவந்துள்ளதுடன்,பிரித்தானிய குடியுரிமை பெற்ற குறித்த பெண் 29 வயதுடைய தமது காதலனுடன் 6 மாதங்களாக கல்கிசையில் தங்கியுள்ளார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.எவ்வாறாயினும், குறித்த பெண் நேற்று காலை இங்கிலாந்து திரும்பவிருந்த வேளையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.அதன்பின்னர், இந்த சம்பவ இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.நேற்று பிற்பகல் சம்பவம் இடம்பெற்ற இடத்தை கல்கிசை பதில் நீதவான் ரத்ன கமகே பார்வையிட்டுள்ளார்.இன்றைய தினம் பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய முடியும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement