பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் ஆரம்ப சுற்றின் போட்டியொன்றில் இலங்கையைச் சேர்ந்த தருஷி கருணாரத்ன 08 வது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
இந்த போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2:07:26 நிமிடங்களில் தருஷி கருணாரத்ன நிறைவு செய்தார்.
இந்த போட்டியின் முதலாம் இடத்தை ஜமைக்காவின் நாடோயா கோலே, 02ஆம் இடத்தை அவுஸ்ரேலியாவின் கிளாடியா ஹோலிங்ஸ்வொர்த், 03 ஆம் இடத்தை கென்யாவைச் சேர்ந்த லிலியன் ஒடிரா பெற்றுக்கொண்டனர்.
ஆரம்ப சுற்றின் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 03 இடங்களைப் பெற்றுக்கொள்ளும் வீரர்கள் அரையிறுதி சுற்றுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவர்.
இருப்பினும், Repechage எனும் முறைமைக்கமைய அரையிறுதி சுற்றுக்கு நேரடியாக தெரிவு செய்யப்படாத வீரர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படும்.
தருஷி கருணாரத்ன பங்கேற்றும் Repechage சுற்று ஓட்டப் போட்டி நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டம்: தருஷிக்கு எட்டாவது இடம் பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் ஆரம்ப சுற்றின் போட்டியொன்றில் இலங்கையைச் சேர்ந்த தருஷி கருணாரத்ன 08 வது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.இந்த போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2:07:26 நிமிடங்களில் தருஷி கருணாரத்ன நிறைவு செய்தார்.இந்த போட்டியின் முதலாம் இடத்தை ஜமைக்காவின் நாடோயா கோலே, 02ஆம் இடத்தை அவுஸ்ரேலியாவின் கிளாடியா ஹோலிங்ஸ்வொர்த், 03 ஆம் இடத்தை கென்யாவைச் சேர்ந்த லிலியன் ஒடிரா பெற்றுக்கொண்டனர்.ஆரம்ப சுற்றின் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 03 இடங்களைப் பெற்றுக்கொள்ளும் வீரர்கள் அரையிறுதி சுற்றுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவர்.இருப்பினும், Repechage எனும் முறைமைக்கமைய அரையிறுதி சுற்றுக்கு நேரடியாக தெரிவு செய்யப்படாத வீரர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படும்.தருஷி கருணாரத்ன பங்கேற்றும் Repechage சுற்று ஓட்டப் போட்டி நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.