• May 19 2024

கோதுமை மாவுக்கான வரி அதிகரிப்பு - பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்குமா? samugammedia

Chithra / Aug 31st 2023, 7:52 am
image

Advertisement

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்களின் அடிப்படையில் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிப்பத்திர முறைமையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான வரி அதிகரிப்பு பேக்கரி தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்

ஆனால் பேக்கரி தொழில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியும் கிலோ ஒன்றுக்கு 16 ரூபாவில் இருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமை தானியங்களுக்கு 6 ரூபா வரி விதிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கோதுமை மாவுக்கான வரி அதிகரிப்பு - பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்குமா samugammedia இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்களின் அடிப்படையில் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிப்பத்திர முறைமையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான வரி அதிகரிப்பு பேக்கரி தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்ஆனால் பேக்கரி தொழில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியும் கிலோ ஒன்றுக்கு 16 ரூபாவில் இருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமை தானியங்களுக்கு 6 ரூபா வரி விதிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement