ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக சுமார் 5 வருடங்கள் கடமையாற்றி வந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும், அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அசௌகரியம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த செய்திகளுக்கு பதில் அளிக்காததால், வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவிகள் மீது தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும்,
அந்த மாணவிகள் அமர்ந்திருக்கும் கதிரைகளுக்கு முன்பாக இருக்கும் மேசைகளின் மேல், “என்னுடைய யோசனைக்கு இணக்கமா?” என எழுதியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவிகள் வட்டவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்படி, வட்டவளை பொலிஸாரால் 44 வயதுடைய சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் கைது. ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக சுமார் 5 வருடங்கள் கடமையாற்றி வந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த ஆசிரியர் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும், அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அசௌகரியம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அந்த செய்திகளுக்கு பதில் அளிக்காததால், வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவிகள் மீது தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும், அந்த மாணவிகள் அமர்ந்திருக்கும் கதிரைகளுக்கு முன்பாக இருக்கும் மேசைகளின் மேல், “என்னுடைய யோசனைக்கு இணக்கமா” என எழுதியுள்ளதாகவும் தெரியவருகின்றது.இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவிகள் வட்டவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.இதன்படி, வட்டவளை பொலிஸாரால் 44 வயதுடைய சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.