• Nov 24 2024

இரத்தக் காயங்களுடன் ஆசிரியர் சடலமாக மீட்பு- புல்மோட்டையில் சோகம்!

Tamil nila / Nov 7th 2024, 6:21 pm
image

புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நற்பிட்டிமுனையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொகமட் முபீஸ் (வயது 28) என்ற இளம் குடும்பஸ்தர் நேற்றுப் புதன்கிழமை மாலை பாடசாலையில் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மரணம் மர்மமான முறையில் நிகழ்ந்துள்ளது என்று அறியமுடிகின்றது.

நேற்றுப் புதன்கிழமை காலை பாடசாலை வரவுப் பதிவு இயந்திரத்தில் வருகையைப் பதிவு செய்த பின்னர் இவர் வகுப்பறைகளுக்குச் சென்று காலை 10.30 மணி வரை பாடம் நடத்தியுள்ளார்.

அப்போது அவர் தனது இடமாற்றம் தொடர்பாகக் கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்திக்கத் திருகோணமலை நகருக்குச் செல்லவுள்ளதாக மாணவர்களுக்குக் கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்றுப் பிற்பகல் பாடசாலை முடிவடைந்த பின்னர் மாலை 3.30 மணிவரை வெளியேறுவதற்கான பதிவை இயந்திரத்தில் இவர் பதிவு செய்யவில்லை.

இதேவேளை, இவரது மனைவி தமது கணவருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் பதில் இல்லை. எனவே எங்கே எனது கணவர் உள்ளார் என்று பாடசாலை அதிபருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் வினவியுள்ளார். இதையடுத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மேற்படி ஆசிரியர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்வையிட்டபோது அவர் உயிரற்ற நிலையிலும், உள்ளாடை மற்றும் காற்சட்டை என்பன அவிழ்ந்த நிலையிலும், கால்களில் இரத்தக் காயங்களுடனும் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

நேற்று இரவு சம்பவ இடத்துக்கு வருகை தந்த நீதிவானின் உத்தரவுக்கு  இணங்க சடலம் சட்ட வைத்திய மரண பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இரத்தக் காயங்களுடன் ஆசிரியர் சடலமாக மீட்பு- புல்மோட்டையில் சோகம் புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நற்பிட்டிமுனையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொகமட் முபீஸ் (வயது 28) என்ற இளம் குடும்பஸ்தர் நேற்றுப் புதன்கிழமை மாலை பாடசாலையில் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவரது மரணம் மர்மமான முறையில் நிகழ்ந்துள்ளது என்று அறியமுடிகின்றது.நேற்றுப் புதன்கிழமை காலை பாடசாலை வரவுப் பதிவு இயந்திரத்தில் வருகையைப் பதிவு செய்த பின்னர் இவர் வகுப்பறைகளுக்குச் சென்று காலை 10.30 மணி வரை பாடம் நடத்தியுள்ளார்.அப்போது அவர் தனது இடமாற்றம் தொடர்பாகக் கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்திக்கத் திருகோணமலை நகருக்குச் செல்லவுள்ளதாக மாணவர்களுக்குக் கூறியுள்ளார்.இந்நிலையில், நேற்றுப் பிற்பகல் பாடசாலை முடிவடைந்த பின்னர் மாலை 3.30 மணிவரை வெளியேறுவதற்கான பதிவை இயந்திரத்தில் இவர் பதிவு செய்யவில்லை.இதேவேளை, இவரது மனைவி தமது கணவருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் பதில் இல்லை. எனவே எங்கே எனது கணவர் உள்ளார் என்று பாடசாலை அதிபருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் வினவியுள்ளார். இதையடுத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மேற்படி ஆசிரியர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்வையிட்டபோது அவர் உயிரற்ற நிலையிலும், உள்ளாடை மற்றும் காற்சட்டை என்பன அவிழ்ந்த நிலையிலும், கால்களில் இரத்தக் காயங்களுடனும் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.இதனையடுத்து சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.நேற்று இரவு சம்பவ இடத்துக்கு வருகை தந்த நீதிவானின் உத்தரவுக்கு  இணங்க சடலம் சட்ட வைத்திய மரண பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement