• Sep 17 2024

பாடசாலையில் ஒரு மணி நேரத்திற்குள் மாயமான ஆசிரியையின் கைப்பை..! samugammedia

Chithra / Jun 12th 2023, 12:03 pm
image

Advertisement

ஹொரணையில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஓய்வறையில் இருந்து ஆசிரியை ஒருவரின் கைப்பையை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த கைப்பையில் சுமார் 120,000 ரூபா பெறுமதியான ஆப்பிள் கைத்தொலைபேசியும், சுமார் 7,000 ரூபா பெறுமதியான மேலும் ஒரு தொலைபேசியும், 6,000 ரூபா பணமும் இருந்ததாக குறித்த ஆசிரியை வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (11) மாணவா்களின் பெற்றோரை அழைத்து பாடசாலையை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதனை கண்காணிப்பதற்காக வருகை தந்திருந்த ஆசிரியை, 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசிரியர் ஓய்வறையில் உள்ள மேசையில் கைப்பையை வைத்து விட்டு சுமார் 50 நிமிடங்களுக்கு பின்னர் அங்கு வந்த போது, அதனை காணவில்லை என பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னா் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இது குறித்து தகவல் அளித்து தேடிய போதும் கைப்பை கிடைக்கவில்லை என முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலையில் ஒரு மணி நேரத்திற்குள் மாயமான ஆசிரியையின் கைப்பை. samugammedia ஹொரணையில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஓய்வறையில் இருந்து ஆசிரியை ஒருவரின் கைப்பையை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அந்த கைப்பையில் சுமார் 120,000 ரூபா பெறுமதியான ஆப்பிள் கைத்தொலைபேசியும், சுமார் 7,000 ரூபா பெறுமதியான மேலும் ஒரு தொலைபேசியும், 6,000 ரூபா பணமும் இருந்ததாக குறித்த ஆசிரியை வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று (11) மாணவா்களின் பெற்றோரை அழைத்து பாடசாலையை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.அதனை கண்காணிப்பதற்காக வருகை தந்திருந்த ஆசிரியை, 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசிரியர் ஓய்வறையில் உள்ள மேசையில் கைப்பையை வைத்து விட்டு சுமார் 50 நிமிடங்களுக்கு பின்னர் அங்கு வந்த போது, அதனை காணவில்லை என பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.பின்னா் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இது குறித்து தகவல் அளித்து தேடிய போதும் கைப்பை கிடைக்கவில்லை என முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement