• Nov 28 2025

அனர்த்த நிலைமைகளை அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

shanuja / Nov 27th 2025, 5:20 pm
image

சீரற்ற காலநிலையினால் கொழும்பு மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளை அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


பிரதமர் ஊடகப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, 


எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் ஏற்படக்கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய ஆபத்தான நிலைமைகளை எதிர்கொள்வதற்குச் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று,2025 நவம்பர் 27 பாராளுமன்ற வளாகத்தில் கூடியது.


இதன்போது, பிரதமரின் பணிப்புரைக்கு அமைய, கொழும்பு மாவட்ட மக்களுக்கு அவசர நிலைமைகளை அறிவிப்பதற்காகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


அவசர அழைப்பு இலக்கம் (Hotline) 117


கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு: 0112434028


அனர்த்த முகாமைத்துவ நிலையம்: 0112136136


இவற்றுடன், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் செய்திகள் மற்றும் அவசர அறிவிப்புகள் பற்றியும் கவனம் செலுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அனர்த்த நிலைமைகளை அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் சீரற்ற காலநிலையினால் கொழும்பு மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளை அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் ஊடகப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் ஏற்படக்கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய ஆபத்தான நிலைமைகளை எதிர்கொள்வதற்குச் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று,2025 நவம்பர் 27 பாராளுமன்ற வளாகத்தில் கூடியது.இதன்போது, பிரதமரின் பணிப்புரைக்கு அமைய, கொழும்பு மாவட்ட மக்களுக்கு அவசர நிலைமைகளை அறிவிப்பதற்காகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.அவசர அழைப்பு இலக்கம் (Hotline) 117கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு: 0112434028அனர்த்த முகாமைத்துவ நிலையம்: 0112136136இவற்றுடன், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் செய்திகள் மற்றும் அவசர அறிவிப்புகள் பற்றியும் கவனம் செலுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement