சீரற்ற கால நிலையால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியின் முள்ளியடி பகுதி உட்பட பிரதான வீதியிலும் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இன்று (27)கன மழை காரணமாக குறித்த பகுதியின் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் தம்பலகாமம் கோயிலடி பகுதி நெற் செய்கை விவசாய நிலங்களும் மூழ்கியுள்ளன.
200 க்கும் மேற்பட்ட நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பாலம்போட்டாறு பத்தினிபுரம் முள்ளிப்பொத்தானை உள்ளிட்ட பகுதிகளின் தாழ் நிலப் பகுதிகளும் நீரால் மூழ்கியதுடன் வீடுகளுக்கு உள்ளும் நீர் புகுந்ததால் பல்வேறு அசௌகரியங்களை பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்குகின்றனர்.
தாயிப் நகர் தம்பலகாமம் கோயிலடி வைத்தியசாலை வரையான வீதியின் ஒரு பகுதி போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதுடன் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் குளக்டோட்டன் பாடசாலையின் முன்னால் உள்ள பாலம்போட்டாறு வரையான வீதியின் ஒரு பகுதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதிப்புக்குள்ளான பகுதிகளை தம்பலகாமம் பிரதேச செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டு நீரை வழிந்தோடச் செய்யவும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
திருகோணமலையில் சீரற்ற கால நிலையால் போக்குவரத்துக்கு தடை சீரற்ற கால நிலையால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியின் முள்ளியடி பகுதி உட்பட பிரதான வீதியிலும் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.இன்று (27)கன மழை காரணமாக குறித்த பகுதியின் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் தம்பலகாமம் கோயிலடி பகுதி நெற் செய்கை விவசாய நிலங்களும் மூழ்கியுள்ளன. 200 க்கும் மேற்பட்ட நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பாலம்போட்டாறு பத்தினிபுரம் முள்ளிப்பொத்தானை உள்ளிட்ட பகுதிகளின் தாழ் நிலப் பகுதிகளும் நீரால் மூழ்கியதுடன் வீடுகளுக்கு உள்ளும் நீர் புகுந்ததால் பல்வேறு அசௌகரியங்களை பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்குகின்றனர். தாயிப் நகர் தம்பலகாமம் கோயிலடி வைத்தியசாலை வரையான வீதியின் ஒரு பகுதி போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதுடன் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.இந் நிலையில் குளக்டோட்டன் பாடசாலையின் முன்னால் உள்ள பாலம்போட்டாறு வரையான வீதியின் ஒரு பகுதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.குறித்த பாதிப்புக்குள்ளான பகுதிகளை தம்பலகாமம் பிரதேச செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டு நீரை வழிந்தோடச் செய்யவும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.