• Nov 28 2025

நிரம்பி வழியும் குளங்கள் வெள்ளத்தில் முழ்கிய வவுனியா - மக்கள் இடம்பெயரும் அபாயம் !

dileesiya / Nov 27th 2025, 5:21 pm
image

பெரும்பாலான குளங்களில் நீர்மட்டம் அதிகரித்ததன்  காரணமாக வான் பாய்ந்து வருவதோடு திருநாவற்குளம், தாண்டிக்குளம் உட்பட்ட பல்வேறு தாழ்நில பிரதேசங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததன் காரணமாக மக்கள் இடம் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி என்பன வெள்ள நீர் ஊடறுத்து பாய்வதன் காரணமாக போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

பாவற்குளம் மற்றும் பேராறு நீர்த்தேக்கம் ஆகியவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் இடம்பெயரும் பட்சத்தில் அவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலக மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் உபாலி சமரசிங்க கொழும்பிலிருந்து உடனடியாக வவுனியாவுக்கு வருகை தந்துள்ளதோடு நாளைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட கூட்டம் ஒன்றினையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இடம்பெயரும் மக்களுக்களுக்கு சமைத்த உணவுகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரால் அரசாங்க அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக போக்குவரத்துக்கள் தடைபட்டுள்ளதோடு மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்குண்ணாமடு மற்றும் நொச்சுமோட்டை ஆகிய பகுதிகளில் ஏ9 வீதியின் ஊடாக வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் சிறிய ரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை சமணங்குளம் குளத்தில் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அதனை மண் மூடைகள் கொண்டு பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.




நிரம்பி வழியும் குளங்கள் வெள்ளத்தில் முழ்கிய வவுனியா - மக்கள் இடம்பெயரும் அபாயம் பெரும்பாலான குளங்களில் நீர்மட்டம் அதிகரித்ததன்  காரணமாக வான் பாய்ந்து வருவதோடு திருநாவற்குளம், தாண்டிக்குளம் உட்பட்ட பல்வேறு தாழ்நில பிரதேசங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததன் காரணமாக மக்கள் இடம் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.இதேவேளை ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி என்பன வெள்ள நீர் ஊடறுத்து பாய்வதன் காரணமாக போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.பாவற்குளம் மற்றும் பேராறு நீர்த்தேக்கம் ஆகியவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மக்கள் இடம்பெயரும் பட்சத்தில் அவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலக மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் உபாலி சமரசிங்க கொழும்பிலிருந்து உடனடியாக வவுனியாவுக்கு வருகை தந்துள்ளதோடு நாளைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட கூட்டம் ஒன்றினையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை இடம்பெயரும் மக்களுக்களுக்கு சமைத்த உணவுகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரால் அரசாங்க அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக போக்குவரத்துக்கள் தடைபட்டுள்ளதோடு மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கல்குண்ணாமடு மற்றும் நொச்சுமோட்டை ஆகிய பகுதிகளில் ஏ9 வீதியின் ஊடாக வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் சிறிய ரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.இதேவேளை சமணங்குளம் குளத்தில் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அதனை மண் மூடைகள் கொண்டு பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement