தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
ரெலோ அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்து முன்னாள் மாநகரசபை மாகாண சபை உறுப்பினராக இருந்த விந்தன் கனகரட்னத்துக்கும் கட்சிக்கும் இடையில் அண்மைக்காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்திருந்தன.
இந் நிலையில் திடிரென நேற்றையதினம் அவரும் அவரது மகனும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் முன்னிலையில் தமிழரசுக் கட்சியில் இணைந்து உறுப்புரிமைகளையும் பெற்றுக் கெண்டுள்ளனர்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் முதல், அரசியல் பயணம் என நீண்டகால உறுப்பினர் மட்டுமல்லாது, அக்கட்சியின் முக்கியஸ்தராகவும் விளங்கி வந்த விந்தன் கனகரட்னம், அக் கட்சியிலிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டமை அரசியல் கட்சிகளிடத்தே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெலோவின் முக்கியஸ்தர் விந்தன் தமிழ் அரசுக் கட்சியில் இணைவு தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.ரெலோ அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்து முன்னாள் மாநகரசபை மாகாண சபை உறுப்பினராக இருந்த விந்தன் கனகரட்னத்துக்கும் கட்சிக்கும் இடையில் அண்மைக்காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்திருந்தன.இந் நிலையில் திடிரென நேற்றையதினம் அவரும் அவரது மகனும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் முன்னிலையில் தமிழரசுக் கட்சியில் இணைந்து உறுப்புரிமைகளையும் பெற்றுக் கெண்டுள்ளனர்.தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் முதல், அரசியல் பயணம் என நீண்டகால உறுப்பினர் மட்டுமல்லாது, அக்கட்சியின் முக்கியஸ்தராகவும் விளங்கி வந்த விந்தன் கனகரட்னம், அக் கட்சியிலிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டமை அரசியல் கட்சிகளிடத்தே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.