• Nov 25 2024

இஸ்ரேலில் பதற்றம் - 48 மணி நேர அவசரநிலை பிரகடனம்!

Anaath / Aug 25th 2024, 3:47 pm
image

ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தி வரும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அடுத்த 48 மணி நேரத்திற்கு ராணுவ அவசர நிலைமை  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

இஸ்ரேலின் இராணுவம் தெற்கு லெபனானில் இரவு முழுவதும் வான்வழித் தாக்குதல்களை நடத்திய நிலையில் அதற்கு பதிலடியாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் 11 இராணுவ தளங்களைக் குறிவைத்து 320 இற்கும் அதிகமான எறிகணைகளை  ஏவியுள்ளது. 

ஒரு பெரிய ஆளில்லா விமானம் மற்றும் ராக்கெட் தாக்குதலுடன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஜூலை மாதம் பெய்ரூட்டில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி ஃபுவாட் ஷுக்ரைக் கொல்லப்பட்ட்டார். 

இதற்கு பதிலடியாகவே குறித்த ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் எதிர்பாராத தாக்குதல்களை அடுத்து இஸ்ரேலின்  பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் கலன்ற் (Yoav Gallant) நாடளாவிய ரீதியாக 48 மணி நேர அவசர கால நிலைமையினை பிரகடனப்படுத்தியுள்ளதுடன் பொதுமக்களின் நடமாட்டங்களையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் பதற்றம் - 48 மணி நேர அவசரநிலை பிரகடனம் ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தி வரும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அடுத்த 48 மணி நேரத்திற்கு ராணுவ அவசர நிலைமை  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இஸ்ரேலின் இராணுவம் தெற்கு லெபனானில் இரவு முழுவதும் வான்வழித் தாக்குதல்களை நடத்திய நிலையில் அதற்கு பதிலடியாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் 11 இராணுவ தளங்களைக் குறிவைத்து 320 இற்கும் அதிகமான எறிகணைகளை  ஏவியுள்ளது. ஒரு பெரிய ஆளில்லா விமானம் மற்றும் ராக்கெட் தாக்குதலுடன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஜூலை மாதம் பெய்ரூட்டில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி ஃபுவாட் ஷுக்ரைக் கொல்லப்பட்ட்டார். இதற்கு பதிலடியாகவே குறித்த ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் எதிர்பாராத தாக்குதல்களை அடுத்து இஸ்ரேலின்  பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் கலன்ற் (Yoav Gallant) நாடளாவிய ரீதியாக 48 மணி நேர அவசர கால நிலைமையினை பிரகடனப்படுத்தியுள்ளதுடன் பொதுமக்களின் நடமாட்டங்களையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement