• May 04 2024

கொழும்பில் பதற்ற நிலை - காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 20 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி ! SamugamMedia

Tamil nila / Feb 26th 2023, 5:35 pm
image

Advertisement

தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக “கொழும்பிற்கு எதிர்ப்பு” என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


அங்கு காயமடைந்த சுமார் 20 ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


கொழும்பு இப்பன்வல சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தினர்.


இந்த போராட்டத்திற்கு எதிராக கோட்டை பொலிஸாரும் மருதானை பொலிஸாரும் இணைந்து இரண்டு நீதிமன்ற உத்தரவுகளை பெற்றிருந்த நிலையில் இன்று பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டது.


அதன்படி, போராட்டத்தை கைவிடுமாறு முன் வந்த போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்


ஆனால், அவர்கள் வீதியை மறித்த போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கொழும்பில் பதற்ற நிலை - காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 20 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி SamugamMedia தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக “கொழும்பிற்கு எதிர்ப்பு” என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அங்கு காயமடைந்த சுமார் 20 ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.கொழும்பு இப்பன்வல சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தினர்.இந்த போராட்டத்திற்கு எதிராக கோட்டை பொலிஸாரும் மருதானை பொலிஸாரும் இணைந்து இரண்டு நீதிமன்ற உத்தரவுகளை பெற்றிருந்த நிலையில் இன்று பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டது.அதன்படி, போராட்டத்தை கைவிடுமாறு முன் வந்த போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்ஆனால், அவர்கள் வீதியை மறித்த போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement