• Oct 23 2024

யாழில் இருந்து மட்டு நோக்கிய சாதனை துவிச்சக்கரவண்டி பயணம்! samugammedia

Chithra / Jul 4th 2023, 5:24 pm
image

Advertisement

101 ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், தேசிய ரீதியில் கூட்டுறவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சாதனை துவிச்சக்கரவண்டி பயணமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.கைலாயநாதன் இந்த துவிச்சக்கரவண்டி பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி பயணம் திருமலை ஊடாக திங்கட்கிழமை(03) மட்டக்களப்பை வந்தடைந்தது.

மாவட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்கள பணிப்பாளரும், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருமான நடராஜா சிவலிங்கம் தலைமையில் வரவேற்பு நிகழ்வு பிள்ளையாரடியில் இடம்பெற்றது.

இவரை மாலை அணிவித்து வரவேற்று, மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் இவருக்குரிய கௌரவம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் கலந்து கொண்டு இவரை கௌரவித்தார்.

மட்டு மாவட்ட கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினரும் இவருக்கு நினைவு சின்னங்களை வழங்கிக் கௌரவித்தனர்.

இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இங்கு உரையாற்றுகையில்

''யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமான இப்பயணம் அம்பாறை நோக்கி செல்ல உள்ளதுடன், அங்கிருந்து மலையகம் சென்று மீண்டும் யாழ்ப்பாணத்தைச் சென்று தனது சாதனையை நிறைவு செய்ய உள்ளார்.

இவர் ஒரு வார காலத்தில் தனது பயணத்தை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளார்.

தேசிய ரீதியில் நிலையான அபிவிருத்திக்காக இந்த வயதான காலத்திலும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது சாதனையைச்  செய்ய உள்ளார்.


கடந்த காலங்களில் கூட்டுறவு தனியான அமைச்சாக இருந்தது. தற்போது அவ்வாறில்லை அது வர்த்தக வாணிப அமைச்சுக்குள் ஒன்றாக உள்ளது.

முன்னைய காலத்தில் கூட்டுறவு என்பது ஒரு பலமான சக்தியாக இருந்தது. சில நாடுகளில் அது பலமாக உள்ளது. ஆனால் சில இடங்களில் வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது.'' என  இதன்போது தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கூட்டுறவு திணைக்கள உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின பிரதிநிதிகள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.  

யாழில் இருந்து மட்டு நோக்கிய சாதனை துவிச்சக்கரவண்டி பயணம் samugammedia 101 ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், தேசிய ரீதியில் கூட்டுறவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சாதனை துவிச்சக்கரவண்டி பயணமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஓய்வு பெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.கைலாயநாதன் இந்த துவிச்சக்கரவண்டி பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி பயணம் திருமலை ஊடாக திங்கட்கிழமை(03) மட்டக்களப்பை வந்தடைந்தது.மாவட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்கள பணிப்பாளரும், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருமான நடராஜா சிவலிங்கம் தலைமையில் வரவேற்பு நிகழ்வு பிள்ளையாரடியில் இடம்பெற்றது.இவரை மாலை அணிவித்து வரவேற்று, மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் இவருக்குரிய கௌரவம் அளிக்கப்பட்டது.இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் கலந்து கொண்டு இவரை கௌரவித்தார்.மட்டு மாவட்ட கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினரும் இவருக்கு நினைவு சின்னங்களை வழங்கிக் கௌரவித்தனர்.இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இங்கு உரையாற்றுகையில்''யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமான இப்பயணம் அம்பாறை நோக்கி செல்ல உள்ளதுடன், அங்கிருந்து மலையகம் சென்று மீண்டும் யாழ்ப்பாணத்தைச் சென்று தனது சாதனையை நிறைவு செய்ய உள்ளார்.இவர் ஒரு வார காலத்தில் தனது பயணத்தை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளார்.தேசிய ரீதியில் நிலையான அபிவிருத்திக்காக இந்த வயதான காலத்திலும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது சாதனையைச்  செய்ய உள்ளார்.கடந்த காலங்களில் கூட்டுறவு தனியான அமைச்சாக இருந்தது. தற்போது அவ்வாறில்லை அது வர்த்தக வாணிப அமைச்சுக்குள் ஒன்றாக உள்ளது.முன்னைய காலத்தில் கூட்டுறவு என்பது ஒரு பலமான சக்தியாக இருந்தது. சில நாடுகளில் அது பலமாக உள்ளது. ஆனால் சில இடங்களில் வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது.'' என  இதன்போது தெரிவித்தார்.இந்த நிகழ்வில் கூட்டுறவு திணைக்கள உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின பிரதிநிதிகள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.  

Advertisement

Advertisement

Advertisement