சர்வதேச ஊடகவியலாளர் படுகொலை; உலக நாடுகள் கண்டனம்!

சர்வதேச ஊடகமான Al Jazeera இல் பணியாற்றிக் கொண்டிருந்த ஊடகவியலாளர் Shireen Abu Akleh பணித் தளத்தில் இஸ்ரேல் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலக நாடுகள் மற்றும் உலக ஊடக அமைப்புக்கள் தமது வன்மையான கண்டனங்களை தொடர்ந்தும் எழுப்பி வருகின்றனர்.

மேலும் கடந்த 11ம் திகதி West Bank பகுதியில் இஸ்ரேல் படைகளின் படை நடவடிக்கையின் போது பணியில் ஈடுபட்டிருந்த பலஸ்தீன சர்வதேச ஊடக அமைப்பான Al Jazeera இல் தனது கடமையினை மேற்கொண்டிருந்த நிலையில் இஸ்ரேல் படைகளின் துப்பாக்கி சூட்டில் Shireen Abu Akleh பலியானார்.

இவருடைய மறைவையடுத்து பல அமைப்புக்கள் மற்றும் அமெரிக்கா, ஜோர்டன், ஜேர்மனி, சோமாலியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் என பல பாகங்களிலும் இருந்து இஸ்ரேலின் மேற்படி ஊடகத்திற்கு எதிரான மூர்க்கத்தனமான செயலை எதிர்த்து கண்டணங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் வெளியிட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் தோன்றியுள்ளதாகவும் மனிதநேயமற்ற செயலுக்காக இஸ்ரேல் படையினர் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் மேலும் கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை