• Apr 16 2024

இந்திய அணியை அலறவிட்ட வங்கதேச அணி: இறுதி வரை தொடர்ந்த பரபரப்பு!

Sharmi / Dec 4th 2022, 9:25 pm
image

Advertisement

வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி உள்ள இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

இந்திய அணியில் அறிமுக வீரராக குல்தீப் சான் களமிறங்கியுள்ளார். மேலும் காயம் காரணமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தொடரில் இருந்து விலகியுள்ளார். தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் சோபிக்கவில்லை. தவான் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நல்ல பார்மீல் இருந்த விராட் கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

சற்று நிதனமாக விளையாடிய கேப்டன் ரோகித் 27 ரன்களுக்கும் ஸ்ரேஸ் ஜயர் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையை கட்டினர். இந்திய அணி 92 ரன்களுக்கு முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்து திணறியது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டெடுத்து அரைசதம் அடித்தார். கடைசி வரை போராடிய அவர் 73 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 41.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 186 ரன்களை குவித்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகிப் அல் ஹாசன் 5 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.

முதல் ஓவரிலே சாண்டோ விக்கெட்டை தீபக் சாஹார் வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சியளித்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் லிண்டன் தாஸ் 41 ரன்களுக்கு ஷாகிப் ஆல் ஹாசன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 136 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து இருந்த வங்கதேச அணியின் கடைசி விக்கெட்டுக்கு ஹாசன் மிர்ஸ் மற்றும் முஸ்தாபிர் ரகுமான் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

கடைசி விக்கெட்டிற்கு பாரட்டனர்ஷிப் அமைத்த இந்த ஜோடியால் இந்திய அணி பவுலர்கள் திணறினர். 50 ரன்கள் பார்டன்ர்ஷிப் அமைத்து வங்கதேச  அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர். பரபரப்பாக சென்ற போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணியை அலறவிட்ட வங்கதேச அணி: இறுதி வரை தொடர்ந்த பரபரப்பு வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி உள்ள இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.இந்திய அணியில் அறிமுக வீரராக குல்தீப் சான் களமிறங்கியுள்ளார். மேலும் காயம் காரணமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தொடரில் இருந்து விலகியுள்ளார். தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் சோபிக்கவில்லை. தவான் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நல்ல பார்மீல் இருந்த விராட் கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.சற்று நிதனமாக விளையாடிய கேப்டன் ரோகித் 27 ரன்களுக்கும் ஸ்ரேஸ் ஜயர் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையை கட்டினர். இந்திய அணி 92 ரன்களுக்கு முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்து திணறியது.தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டெடுத்து அரைசதம் அடித்தார். கடைசி வரை போராடிய அவர் 73 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 41.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 186 ரன்களை குவித்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகிப் அல் ஹாசன் 5 விக்கெட்டை வீழ்த்தினார்.இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.முதல் ஓவரிலே சாண்டோ விக்கெட்டை தீபக் சாஹார் வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சியளித்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் லிண்டன் தாஸ் 41 ரன்களுக்கு ஷாகிப் ஆல் ஹாசன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 136 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து இருந்த வங்கதேச அணியின் கடைசி விக்கெட்டுக்கு ஹாசன் மிர்ஸ் மற்றும் முஸ்தாபிர் ரகுமான் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.கடைசி விக்கெட்டிற்கு பாரட்டனர்ஷிப் அமைத்த இந்த ஜோடியால் இந்திய அணி பவுலர்கள் திணறினர். 50 ரன்கள் பார்டன்ர்ஷிப் அமைத்து வங்கதேச  அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர். பரபரப்பாக சென்ற போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Advertisement

Advertisement

Advertisement