• May 14 2024

நாட்டில் தேர்தலை வைப்பதே சிறந்த வழி: மக்களின் மன அழுத்தத்தை தேர்தல் மூலமே வெளிக்காட்ட முடியும்- ஹிருணிகா வேண்டுகோள்!

Sharmi / Jan 4th 2023, 10:35 pm
image

Advertisement

இந்த ஆண்டு ஆரம்பமாகி துயரத்துடன் ஆரம்பித்துள்ளது அதாவது ஒரு தாய் தன் இரு பிள்ளைகளிற்கும் தாமும் விஷம் குடித்துள்ளார். ஏனென்றால் கடன் பிரச்சனையால் கடனை கட்ட முடியாத நிலையினால் விஷம் அருந்தியுள்ளனர். அவர்களுள் ஒரு பிள்ளை இறந்துள்ளார். மற்றுமொரு பிள்ளை ரிச்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார். தாய் அவசரசிகிச்சை பிரிவில் இருக்கிறார். இவர்களின் தந்தை ஒரு இராணுவ வீரர் நாட்டிற்காக தன் உயிரை கொடுத்தவர்  என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் தெரிவித்தார்.

சமூக வலைத்தளத்தில் இன்றைய நேரலையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ராஜபக்ஷவின் குடும்பத்தினர் யுத்தத்தை மையமாகக் வைத்து கொண்டே ஆட்சிக்கு நுழைந்தனர். உண்மையில் ஒரு இராணுவ வீரரின் குடும்பத்தினர் என்பவர்கள் மத்திய தர குடும்பத்தினரே அவர்களிற்கு இந்த நிலை என்றால் வறுமை உள்ளவர்களின் நிலை என்ன. மற்றும் நாட்டில் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் பொருளாதார பிரச்சனை சமாளிக்க முடியாத நிலை ஏற்படும்

இதனால் நாட்டில் தேர்தலை வைப்பது  சிறந்த வழி மக்களின் மன அழுத்தத்தை தேர்தல் மூலமே வெளிக்காட்ட முடியும்.  அதே போல மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது அதாவது கல்வி உபகரணங்களின் விலை பன் மடங்காக உயர்ந்துள்ளது. அதே இத் தேர்தலின் போது பெண்களிற்கும் வாய்ப்பளியுங்கள் இதனால் பெண்கள் மீதான வன்முறை குறைக்க முடியும் மற்றும் நாட்டில் வசந்த முதலிகே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நியாயமான செயல் அல்ல நாட்டிற்கு சிறந்த இளைஞர் சமூகம் அவசியம். 

சரியான முறையில் நாட்டை வழிபடுத்த வேண்டியது அரசியல் தலைவர்களின் கடமை ஆனால் இன்று அவ்வாறான நிலை இல்லை என தெரிவித்தார்.

நாட்டில் தேர்தலை வைப்பதே சிறந்த வழி: மக்களின் மன அழுத்தத்தை தேர்தல் மூலமே வெளிக்காட்ட முடியும்- ஹிருணிகா வேண்டுகோள் இந்த ஆண்டு ஆரம்பமாகி துயரத்துடன் ஆரம்பித்துள்ளது அதாவது ஒரு தாய் தன் இரு பிள்ளைகளிற்கும் தாமும் விஷம் குடித்துள்ளார். ஏனென்றால் கடன் பிரச்சனையால் கடனை கட்ட முடியாத நிலையினால் விஷம் அருந்தியுள்ளனர். அவர்களுள் ஒரு பிள்ளை இறந்துள்ளார். மற்றுமொரு பிள்ளை ரிச்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார். தாய் அவசரசிகிச்சை பிரிவில் இருக்கிறார். இவர்களின் தந்தை ஒரு இராணுவ வீரர் நாட்டிற்காக தன் உயிரை கொடுத்தவர்  என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் தெரிவித்தார்.சமூக வலைத்தளத்தில் இன்றைய நேரலையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,ராஜபக்ஷவின் குடும்பத்தினர் யுத்தத்தை மையமாகக் வைத்து கொண்டே ஆட்சிக்கு நுழைந்தனர். உண்மையில் ஒரு இராணுவ வீரரின் குடும்பத்தினர் என்பவர்கள் மத்திய தர குடும்பத்தினரே அவர்களிற்கு இந்த நிலை என்றால் வறுமை உள்ளவர்களின் நிலை என்ன. மற்றும் நாட்டில் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் பொருளாதார பிரச்சனை சமாளிக்க முடியாத நிலை ஏற்படும்இதனால் நாட்டில் தேர்தலை வைப்பது  சிறந்த வழி மக்களின் மன அழுத்தத்தை தேர்தல் மூலமே வெளிக்காட்ட முடியும்.  அதே போல மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது அதாவது கல்வி உபகரணங்களின் விலை பன் மடங்காக உயர்ந்துள்ளது. அதே இத் தேர்தலின் போது பெண்களிற்கும் வாய்ப்பளியுங்கள் இதனால் பெண்கள் மீதான வன்முறை குறைக்க முடியும் மற்றும் நாட்டில் வசந்த முதலிகே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நியாயமான செயல் அல்ல நாட்டிற்கு சிறந்த இளைஞர் சமூகம் அவசியம். சரியான முறையில் நாட்டை வழிபடுத்த வேண்டியது அரசியல் தலைவர்களின் கடமை ஆனால் இன்று அவ்வாறான நிலை இல்லை என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement