• Sep 21 2024

13 ஐ ஒழிக்கும் வரை ஓயப்போவதில்லை - பிக்குகள் சபதம் ; மிகிந்தலையில் அடுத்த கட்ட போராட்டம் ! SamugamMedia

Tamil nila / Feb 18th 2023, 8:58 am
image

Advertisement

அரசமைப்பின் 13 வது திருத்தத்திற்கு எதிராக மகா சங்கத்தினர் பெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.


அரசமைப்பில் உள்ள 13 வது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையில் அதற்கு மகா சங்கத்தினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.  கடந்த 8 ம் திகதி கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த அவர்கள் 13 வது திருத்தச்சட்டத்தையும் தீயிட்டு எரித்தனர். 


தற்போது அவர்கள் 13 வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக 2 ம கட்ட போராட்டத்தை மிகிந்தலையில்  பெரும் எடுப்பில் நடாத்தத் திட்டமிட்டுள்ளனர். இது தாடர்பில் கருத்துத் தெரிவித்த உலப்பனே சுமங்கல தேரர், கொழும்பில் முதல் வேட்டுத்தான் தீர்க்கப்பட்டது எனவும்  அடுத்தகட்ட நகர்வுகள் அதிரடியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.


தற்போதைய சூழலில் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதை தடுப்பதே எமது பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது. ஐனால் எதிர்வரும் காலங்களில் இத் திருத்ச்சட்டமானது முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. எனவே அது வரை போராட்டம் தொடரும் என வேறு சில பிக்குகள் தெரிவித்தனர்.

13 ஐ ஒழிக்கும் வரை ஓயப்போவதில்லை - பிக்குகள் சபதம் ; மிகிந்தலையில் அடுத்த கட்ட போராட்டம் SamugamMedia அரசமைப்பின் 13 வது திருத்தத்திற்கு எதிராக மகா சங்கத்தினர் பெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.அரசமைப்பில் உள்ள 13 வது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையில் அதற்கு மகா சங்கத்தினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.  கடந்த 8 ம் திகதி கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த அவர்கள் 13 வது திருத்தச்சட்டத்தையும் தீயிட்டு எரித்தனர். தற்போது அவர்கள் 13 வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக 2 ம கட்ட போராட்டத்தை மிகிந்தலையில்  பெரும் எடுப்பில் நடாத்தத் திட்டமிட்டுள்ளனர். இது தாடர்பில் கருத்துத் தெரிவித்த உலப்பனே சுமங்கல தேரர், கொழும்பில் முதல் வேட்டுத்தான் தீர்க்கப்பட்டது எனவும்  அடுத்தகட்ட நகர்வுகள் அதிரடியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.தற்போதைய சூழலில் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதை தடுப்பதே எமது பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது. ஐனால் எதிர்வரும் காலங்களில் இத் திருத்ச்சட்டமானது முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. எனவே அது வரை போராட்டம் தொடரும் என வேறு சில பிக்குகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement