• Jan 26 2025

ஒன்லைன் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் எடுத்த விபரீத முடிவு

Chithra / Jan 6th 2025, 7:34 am
image


கைத்தொலைபேசி ஊடாக ஒன்லைன் வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் சாய்ந்தமருது 11 உடையார் வீதியில் வசித்து வந்த முஹம்மட் நயீம் முஹம்மட் நப்லான்  என்ற 20  வயது இளைஞனே  மரணமடைந்துள்ளார்.

குறித்த இளைஞன் விரக்தியடைந்த நிலையில், ஒரு வகையான மாத்திரைகளை உட்கொண்டு உயிர்மாய்த்துள்ளார். 

இளைஞன்  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்கை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்த இளைஞன் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வந்ததுடன்,

குறித்த ஆலையில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை மாத்திரைகளை உட்கொண்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த இளைஞனின் தந்தை, தனது மகன் வெளிநாட்டில் தொழில் புரிவதற்காக முன்னாயத்தங்களை மேற்கொண்டதாகவும், அதற்காக அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக சேர்த்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது

குறித்த மரணமடைந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சவளக்கடை  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான கைத்தொலைபேசி ஒன்லைன் ஊடாக  புதிய வகை வியாபார உத்திகள் உருவாக்கப்பட்டு, கொடுக்கல் வாங்கல்  இளைஞர் முதல் பல்வேறு தரப்பினரை இலக்கு வைத்து செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த ஒன்லைன் வியாபாரம் சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதில் ஆர்வம் கொண்டு பல இளைஞர்கள் முதல் பலர் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒன்லைன் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் எடுத்த விபரீத முடிவு கைத்தொலைபேசி ஊடாக ஒன்லைன் வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் சாய்ந்தமருது 11 உடையார் வீதியில் வசித்து வந்த முஹம்மட் நயீம் முஹம்மட் நப்லான்  என்ற 20  வயது இளைஞனே  மரணமடைந்துள்ளார்.குறித்த இளைஞன் விரக்தியடைந்த நிலையில், ஒரு வகையான மாத்திரைகளை உட்கொண்டு உயிர்மாய்த்துள்ளார். இளைஞன்  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்கை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.மரணமடைந்த இளைஞன் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வந்ததுடன்,குறித்த ஆலையில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை மாத்திரைகளை உட்கொண்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.அத்துடன் குறித்த இளைஞனின் தந்தை, தனது மகன் வெளிநாட்டில் தொழில் புரிவதற்காக முன்னாயத்தங்களை மேற்கொண்டதாகவும், அதற்காக அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக சேர்த்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதுகுறித்த மரணமடைந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சவளக்கடை  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான கைத்தொலைபேசி ஒன்லைன் ஊடாக  புதிய வகை வியாபார உத்திகள் உருவாக்கப்பட்டு, கொடுக்கல் வாங்கல்  இளைஞர் முதல் பல்வேறு தரப்பினரை இலக்கு வைத்து செயற்படுத்தப்பட்டு வருகின்றது.குறித்த ஒன்லைன் வியாபாரம் சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதில் ஆர்வம் கொண்டு பல இளைஞர்கள் முதல் பலர் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement