• Sep 17 2024

திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கு; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! SamugamMedia

Chithra / Feb 28th 2023, 10:57 am
image

Advertisement

நிதி மற்றும் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்காலை பகுதியைச் சேர்ந்த சமித அனுருத்த என்பவருக்கு காசோலையை வழங்கி மோசடி செய்ததாக திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது வாடிக்கையாளர் சமரச தீர்வுக்கு தயாராக இருப்பதாகவும், அதற்கு இரண்டரை மாத கால அவகாசம் வழங்குமாறும் நீதிமன்றில் கோரினர். 

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், சமரச தீர்வு தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை என நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கு; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு SamugamMedia நிதி மற்றும் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தங்காலை பகுதியைச் சேர்ந்த சமித அனுருத்த என்பவருக்கு காசோலையை வழங்கி மோசடி செய்ததாக திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது வாடிக்கையாளர் சமரச தீர்வுக்கு தயாராக இருப்பதாகவும், அதற்கு இரண்டரை மாத கால அவகாசம் வழங்குமாறும் நீதிமன்றில் கோரினர். மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், சமரச தீர்வு தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை என நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement