• May 17 2024

கண்டியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட யுவதிகளுக்கு ஏற்பட்ட நிலை!

Sharmi / Jan 3rd 2023, 9:36 am
image

Advertisement

கண்டியில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த மூன்று விபச்சார விடுதிகளை கண்டி பொலிஸார் சுற்றிவளைத்து அதன் முகாமையாளர் உட்பட எட்டு யுவதிகளை கைது செய்துள்ளனர்.

கண்டியில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் நடத்தப்படும் விபச்சார நிலையங்கள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் உத்தரவின் பேரில் சோதனையிடப்படுவதில்லை என ஊடகங்களில் வெளியானதையடுத்து பொலிஸார் இந்த அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்வத்த பிரதேசத்தில் கடந்த 31ம் திகதி மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு விபச்சார  நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு அங்கு நான்கு யுவதிகளையும் இரு முகாமையாளர்களையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் முகாமையாளர் ஒருவரிடம் இருந்து 2500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபசார நிலையத்தின் சேவையை பெற்றுக் கொள்வதற்காக வந்த நபர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹேவாஹெட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள விபசார நிலையம் ஒன்றும் கண்டி பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் குழுவினால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் அதன் முகாமையாளரும் இரண்டு யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட யுவதிகளுக்கு ஏற்பட்ட நிலை கண்டியில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த மூன்று விபச்சார விடுதிகளை கண்டி பொலிஸார் சுற்றிவளைத்து அதன் முகாமையாளர் உட்பட எட்டு யுவதிகளை கைது செய்துள்ளனர்.கண்டியில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் நடத்தப்படும் விபச்சார நிலையங்கள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் உத்தரவின் பேரில் சோதனையிடப்படுவதில்லை என ஊடகங்களில் வெளியானதையடுத்து பொலிஸார் இந்த அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்வத்த பிரதேசத்தில் கடந்த 31ம் திகதி மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு விபச்சார  நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு அங்கு நான்கு யுவதிகளையும் இரு முகாமையாளர்களையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் முகாமையாளர் ஒருவரிடம் இருந்து 2500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபசார நிலையத்தின் சேவையை பெற்றுக் கொள்வதற்காக வந்த நபர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.ஹேவாஹெட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள விபசார நிலையம் ஒன்றும் கண்டி பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் குழுவினால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் அதன் முகாமையாளரும் இரண்டு யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement