• May 02 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நாடு மீண்டெழும்- ரஞ்சித் மத்தும பண்டார நம்பிக்கை...!

Sharmi / Apr 6th 2024, 10:28 am
image

Advertisement

நாட்டை மீட்டெடுக்ககூடிய வல்லமை ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கும் சுதந்திர மக்கள் கூட்டணிக்கும் இடையில் நேற்றையதினம்(05)  இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இன்று இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் இந்த நாட்டை யார் பொறுப்பேற்பது என்ற கேள்வியே எழுந்துள்ளது. 

இந்த நாட்டை மீட்டெடுக்ககூடிய வல்லமை  ஐக்கிய மக்கள் சக்தியாகிய எம்மிடமே காணப்படுகின்றது.

எனவே, எமது அடுத்தகட்ட நடவடிக்கையாக ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். ஜீஎல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

எனவே,  எதிர்வரும் தேர்தல் சவாலை நாம் புதிய கூட்டணியாகவே எதிர்கொள்ளவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நாடு மீண்டெழும்- ரஞ்சித் மத்தும பண்டார நம்பிக்கை. நாட்டை மீட்டெடுக்ககூடிய வல்லமை ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்திக்கும் சுதந்திர மக்கள் கூட்டணிக்கும் இடையில் நேற்றையதினம்(05)  இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,இன்று இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் இந்த நாட்டை யார் பொறுப்பேற்பது என்ற கேள்வியே எழுந்துள்ளது. இந்த நாட்டை மீட்டெடுக்ககூடிய வல்லமை  ஐக்கிய மக்கள் சக்தியாகிய எம்மிடமே காணப்படுகின்றது.எனவே, எமது அடுத்தகட்ட நடவடிக்கையாக ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். ஜீஎல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.எனவே,  எதிர்வரும் தேர்தல் சவாலை நாம் புதிய கூட்டணியாகவே எதிர்கொள்ளவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement