• May 22 2025

மீன்பிடிக்கச் சென்றவரை இழுத்துச் சென்ற முதலை; இளம் தந்தை சடலமாக மீட்பு

Chithra / May 21st 2025, 1:24 pm
image

 

மட்டக்களப்பு - மண்முனை பாலத்தின் கீழ் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலை கடிக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு  இடம்பெற்றுள்ளது. 

புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று மூவருடன் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது முதலை இழுத்துச் சென்றுள்ளது.


இந்நிலையில் அவரை தேடும் பணியில் மீனவர்கள், பொலிஸார், சுழியோடிகள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து இன்று ஆற்றிலிருந்து தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலங்களில் இப் பகுதியில் முதலைகளின் நடமாட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்  இச் சம்பவம் தநடந்தேறியுள்ளமை இப் பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மீன்பிடிக்கச் சென்றவரை இழுத்துச் சென்ற முதலை; இளம் தந்தை சடலமாக மீட்பு  மட்டக்களப்பு - மண்முனை பாலத்தின் கீழ் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலை கடிக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்றிரவு  இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் நேற்று மூவருடன் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது முதலை இழுத்துச் சென்றுள்ளது.இந்நிலையில் அவரை தேடும் பணியில் மீனவர்கள், பொலிஸார், சுழியோடிகள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்து இன்று ஆற்றிலிருந்து தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.அண்மைக்காலங்களில் இப் பகுதியில் முதலைகளின் நடமாட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்  இச் சம்பவம் தநடந்தேறியுள்ளமை இப் பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement